மூலப்பொருளே கணேசா.. !

சோலை..! CSR..!
செப்டம்பர் 12, 2018 11:39 முப

ஆயிரம் கரங்கள் நீட்டி 
அடியவன் உன்னைத் தேடி 
மூலப்பொருளே உன்னைக் கண்டு 
சிறு பூவாய் திருவடி அடைவேன்..! 
 
அம்மையப்பன் உணர்த்தியப் பொருளே 
முதலும் முடிவும் நீயே தானே, 
தாயின் குணத்தில் தாரம் தேடி 
மரத்தடியில் அமர்ந்தவன் நீயேதானே..!
 
அறியாத் தவறில் தலையிலந்து
தலைமைக்கு முதல்வன் ஆனாய், 
பகைமைக்கு பாசம் காட்டி 
வெற்றியில் புதுமை கண்டாயே... 
 
தொந்திக் கணபதி!!!