வாழ்ந்து பார்க்கலாமே.......

pandima
செப்டம்பர் 11, 2018 02:35 பிப


அழகாய் உடுத்திக்கனும்
ஆடம்பரமாக அல்ல
ஆபாசமாக இல்லாமல்

அன்பில் துவைத்த வார்த்தைகளை
இதமாக பேசிக்கனும்

அக்கறையாய் கடிந்துக்கலாம்
தெளிவுபட புரிதலால்
நயந்து எடுத்துரைக்கலாம்
சிறு சிறு அறியாமைகளை

இதற்கெல்லாம் முன்
நம்மை நாமே
கேட்டறிய வேண்டுமே ?
நமக்கான தகுதி என்ன ?
நமக்குள்ள தவறுகளென்ன ?

எதைக் கலைய வேனும்?
எதை பழகிக்க வேனும் ?
எதை வளர்த்துக்க வேனும் ?
எதை குறைச்சிக்கனும் ?
எதை சகிச்சுக்கனும் ?
எதை விட்டுக் கொடுக்கனும் ?
எதை தட்டிக் கொடுக்கனும்?

எதை பாராட்டனும் ?
இந்த புரிதல்களோடு ....
மகிழ்ச்சி எனில்
வாய்விட்டு மனசார 
கண்களில் நீர் வழிய
கை கோர்த்து சிரிச்சிரனும்

அழனும்னு தோனுன்னா உரிமைப்பட்டவுங்க
தோழில் சாய்ந்தோ
மடியில் புதைந்தோ 
கத்தி அழுதிடனும்
கண்ணீர் கொட்டி
மூக்கில் நீர் வழிய

பெறுவது சந்தோஷம்
ஆனாலும் 
வழங்குவதில்
சந்தோஷம் இரட்டிப்பாக
திருப்பிக் கிடைக்கும்

வாழ்ந்து பார்க்கலாமே
மனசு குழந்தையாகி
சந்தோஷத்தில் தவழும்
உசிரு பூவாய் கமழும்