காதல்

A SARAVANAKUMAR
செப்டம்பர் 04, 2018 05:25 பிப
 

மரமில்லா நிழலை கண்டு மயங்கி நின்றேன் உவகை கொண்டு! மனமில்லா ஈதல் கண்டு
தயங்கி நின்றேன் தனிமை கொண்டு சினமில்லா தினம் கண்டு சிலிர்த்தது நின்றேன் சிறையை கொண்டு! திறையில்லா திரையை கண்டு திகைத்து நின்றேன் தீயை கொண்டு! குணமில்லா குறையை கண்டு
குமைந்து நின்றேன் குகையை கொண்டு!
ஒளியில்லா ஓவியம் கண்டு ஒளிந்து நின்றேன் என்னை கொண்டு! உளியில்லா சிற்பம் கண்டு
உறைந்து நின்றேன் உன்னை கொண்டு!

ஆ.சரவணக்குமார்