திருமுருகன் காந்தியை விடுதலை செய்! - #ReleaseThirumuruganGandhi - தமிழ்நாடு டிஜிட்டல் மீடியா அசோசியேஷன் காணொலி அறிக்கை

நமது களம்
ஆகஸ்ட் 24, 2018 07:08 பிப
தமிழ் மக்களுக்காக எவ்விதப் பின்வாங்கலும் இன்றித் தொடர்ந்து பாடுபடும் போராளியை இப்படி முற்றிலும் முடக்கிப் போட முயலும் இந்த அட்டூழிய நடவடிக்கைகளைக் கண்டித்தும், திருமுருகன் காந்தி அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு எண்ணிம ஊடகக் கூட்டமைப்பு (Tamil Nadu Digital Media Association) காணொலி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதை இங்கே பகிர்வதன் மூலம் தமிழ்நாட்டின் ஆகச் சிறந்த அறப் போராளியை இக்கணமே விடுதலை செய்யுமாறு நமது களம் இதழும் தன் குரலை இங்கே ஓங்கிப் பதிவு செய்து கொள்கிறது! அத்துடன், இந்தப் பதிவை உங்களால் முடிந்த அளவுக்குப் பகிர்ந்து இந்தக் கோரிக்கை நிறைவேற உதவுமாறும் நீதியை நிலைநாட்ட உதவுமாறும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறது நமது களம்! - முழுமையாய்ப் படிக்கவும் காணொலியைப் பார்க்கவும் - http://www.namathukalam.com/2018/08/releasethirumurugangandhi.html