அம்மா

கார்த்திகா    பாண்டியன்
ஆகஸ்ட் 22, 2018 04:10 பிப

 

பொட்டல் காடு பூப்பூக்கும், 
புழுதிக் காற்று மணம் வீசும், 
கரிசல் காடு காத்திருக்கும், 
கண்மாய் கரை களைத்திருக்கும், 
கதிரறுத்த கையினிலே காயமின்னும் ஆறவில்லை, 
காட்டுக்குள் விறகு வெட்டி கருவாடு சமைக்கிறாயோ??? 
கள்ளி முள் சூழ்ந்திருக்க காடை வேட்டை அவசியம் தானா??? 
களையறுத்தது போதும் கறுக்கும் முன் திரும்பி வா, 
முள் தைத்த பாதத்தில் முப்பொழுதும் ரணமிருக்க, 
மூங்கில் காட்டு நினைவு மூழ்காமல் இருக்கிறதா??? 
உச்சி முத்தம் கொடுத்தவளே, 
எச்சில் சோறு தின்றவளே, 
மூச்சுக் காற்றுப் பட்டு முன் ஜென்மம் செழிக்குதாம்மா!!! 
அம்மி அரைக்கும் கைகள் அசராமல் உழைப்பதென்ன??? 
சோறூட்டும் கைகள் சோர்வுறத் தேவையில்லை, 
உச்சி முதல் பாதம் வரை உன்னுதிரம் படையெடுக்க, 
பிச்சிப்பூ கூந்தலிலே என் கைகள் விளையாட, 
தொட்டிலிடும் தாலாட்டு தூக்கம் பறிக்குதம்மா!!! 
கனவோ கற்பனையோ காற்றாய் பறந்துவிட்டாய், 
காணாமல் தவிக்கிறேன் கணம் தோறும் இரணமுடன்.