மரபுசார் வாழ்வியல் எனும் நல்ல நோக்கமும் ஈலர் பாசுகர் எனும் அரை வேக்காடும்! | அகச் சிவப்புத் தமிழ்

இ.பு.ஞானப்பிரகாசன்
ஆகஸ்ட் 11, 2018 04:29 பிப
ரபுசார் வாழ்வியல் (Traditional Lifestyle) எனும் சொல்லாட்சியைத் தவறாகப் புரிந்து கொண்ட கணவனும் மனைவியும் வீட்டிலேயே உயூடியூபைப் பார்த்து மகப்பேற்றுக்கு (பிரசவத்துக்கு) முயல, கிருத்திகா எனும் அந்தப் பெண் துடிதுடித்துப் பலியான கொடுமை அண்மையில் திருப்பூரில் நடந்திருக்கிறது. ஆனால் இப்பொழுது பேசுபொருள் அஃது இல்லை. இது நடந்த சில நாட்களிலேயே ‘வீட்டிலேயே மகப்பேறு பார்ப்பது எப்படி?’ என ஒரே நாள் பயிற்சி வகுப்பில் கற்றுத் தந்து விடுவதாக விளம்பரம் செய்திருக்கிறார் இணையப் பெரும் புகழ் ஈலர் பாசுகர் (Healer Bhaskar)! இப்பொழுது அவரைப் பிடித்து உள்ளே தள்ளியிருக்கிறது காவல்துறை.

இயற்கை சார் மருத்துவம், இயற்கை சார் அறிவியல், இயற்கை சார் தொழில்நுட்பம் என இயற்கையை ஒட்டி ஒரு மாபெரும் நாகரிகத்தையே கட்டமைத்தவர்கள் தமிழர்கள். ஆகவே பழந்தமிழர்களின் இயற்கை சார் வாழ்வியலுக்கு, மரபார்ந்த வாழ்க்கை முறைக்கு மாறுவது என்பதில் எந்த விதமான மாற்றுக் கருத்தும் நமக்குத் தேவையில்லை. ஆனால் இன்று நாம் கடைப்பிடிக்க முயலும் வீட்டு மகப்பேறு (#homebirth) உண்மையிலேயே நம் மரபைச் சார்ந்த இயற்கை வழிமுறைதானா? ஈலர் பாசுகர் பரிந்துரைப்பது மரபு வழி மருத்துவ முறைதானா? இந்த இரண்டு கேள்விகளுக்கு விடை காண்பதே திருப்பூர் கிருத்திகா போல் மேற்கொண்டு யாரும் உயிரிழக்காமல் தடுக்கும். அதற்கான சிறு முயற்சியே இப்பதிவு.

இதற்குப் பெயர் மரபு வழி மருத்துவமா?

இன்று ஈலர் பாசுகரைக் கைது செய்தவுடன் “மரபு வழி மருத்துவத்தை வலியுறுத்தியதற்காகக் கைது நடவடிக்கையா?” எனப் பலரும் எகிறிக் குதிக்கிறார்கள். எது மரபு வழி மருத்துவம்? ஈலர் பாசுகர் வலியுறுத்துவது மரபு வழி மருத்துவமா? அப்படிச் சொன்னால், ஒன்று – நீங்கள் தமிழர் மரபு வழி மருத்துவம் பற்றி எதுவுமே தெரியாதவராக இருக்க வேண்டும்; அல்லது, ஈலர் பாசுகரின் நூல் எதையுமே படிக்காதவராக இருக்க வேண்டும். ஏன் தெரியுமா? - தொடர்ந்து படிக்க - http://agasivapputhamizh.blogspot.com/2018/08/Healer-Bhaskar-The-Charlatan.html