ஆண்

முகில் நிலா
ஆகஸ்ட் 09, 2018 11:14 பிப
அதிகாலை எழுந்ததும் 
விழிக்கும் கவலைகள் 
அப்பாவிற்கு கண்ணாடி 
அம்மாவிற்கு மருந்து 
அக்கா மகனின் காதுகுத்து 
மனைவிக்கு அடகுவைத்த நகை மீட்ட 
மகளுக்கு உடைவாங்க 
மகனுக்கு படிப்புச் செலவு 
மளிகைக் கடை பாக்கி 
வங்கிக் கடனுக்கு வட்டிகட்ட 

குருதியெல்லாம் வியர்வையாய்க் 
கொட்டி உழைத்தாலும் 
குடும்பத்தின் சுமை தீராதென 
தெரிந்தபின்னும் கூட  
எதோ ஓர் நம்பிக்கை 
உழைக்கத்தான் வேண்டும் 
துன்பத்தின்  பெரும் நெருப்பில் 
தன்னையே எரித்துக் கொள்ளும் 

மெழுகாய்  எப்போதும் ஆண்! 

-முகில் நிலா தமிழ்