தெருக்குழந்தை

முகில் நிலா
ஆகஸ்ட் 07, 2018 04:35 பிப
தாலாட்டுப் பாட 
தாயுமில்லை 
தோள்மீது ஏற்ற 
தந்தையுமில்லை 
ஏனென்று கேட்க
உறவுகளும் இல்லை !

காமத்தின் தேடலில் 
கருவாய் உதித்தேனோ?
மோகத்தில் மதிமயங்கி
தாயுக்கு முறையற்றுப் பிறந்தேனோ?

தெருவோரம் வீசியவள் 
திரும்பி வந்து பார்ப்பாளோ?
என் பிள்ளை இதுவென 
எடுத்து மடி சேர்ப்பாளோ?

உயிர்வாழ எனக்கு 
அமுதேனும் புகட்டுவாளோ?
என் செய்வேன் நான் 
இம்மண்ணில்
 மனிதப் பிறப்பெடுத்த பாவத்துக்கு!

விலங்கினங்கள் கூட 
வெறுப்பதில்லை தன் குட்டிகளை 
பறவைகளும் கூட 
விரட்டுவதில்லை குஞ்சுகளை! 

தொண்டை 
வரண்டு கத்துகிறேன் 
தொடவில்லையா அழுகுரல் 
எவர் காதையும் இன்னும்? 

இத்துணூன்டு வயிரெனக்கு 
சுறக்கலியா 
எவர் மார்பும் 
என் பசி கண்டும்?

இறப்பதுதான் விதியென்றாள் 
இப்பிறப்பெதற்கு எனக்கு? 
பிறந்தவுடன் இறந்துபோக 
பிரசவ வலிதான் எதற்கு என் தாயிற்கு? 

-முகில் நிலா தமிழ்