காவேரி

Saravanan
ஜூன் 13, 2018 10:28 முப
குடகுத்தான் குளிர்கிறதையா எந்தன்
குடல் மட்டும் வாடுவதேனோ!
மலர் வைத்து கொண்டாட எந்தன் மண் உனை தேடுவதேனோ!                 
சிந்தைக்குள் உனை வைத்தேன் அவன் சிறையில் வைத்ததேனோ!       
கட்டி வைத்த கல்லணையோன் உனக்கு கற்பிக்காமல்     விட்டு விடுவதேனோ!           சோறுடைத்த கண்டம் இன்று சேறை காண துடிப்பதேனோ!      
காரிகையால் உமிழ்ந்தவளே சீறிட்டு  வந்திடு என்னில் உனை சித்திரமாய் வைத்திடுவேன் எந்தன் கண்ணில்!