கடவுள் தெரிகிறார் - 2

பிறைநேசன்
May 27, 2018 10:39 முப
புரோட்டான், எலக்ரான் மற்றும் நியூட்ரான்கள் அணுவின் அடிப்படை துகள்கள் என்று இயற்பியல் விஞ்ஞானம் கூறுகிறது. இவையே பிரம்மா, சிவன், விஷ்ணு போல செயலாற்றுகின்றன.
 
மெஞ்ஞானத்தில் சிவன் எப்படி ஆதிக்கடவுளாக ஆதியில் கண்டறியப்பட்டாரோ அது போல எலக்ட்ரான் முதன் முதலில் கண்டறியப்பட்டது.
 
பிரம்மாவாக புரோட்டானையும், விஷ்ணுவாக நடுநிலைத் துகள் நியூட்ரானையும் எடுத்துக்கொள்ளலாம். சிவன் அழிக்கும் வேலையை செய்யும்போது, பிரம்மா படைக்கும் வேலையை செய்கிறார். அதுபோல எலக்ட்ரான் எதிர்மறைத்துகளாக அணுவின் தன்மையை பாதித்தால், புரோட்டான் நேர்மறைத்துகளாக அணுவின் தன்மையை பாதிக்கிறது.
 
“பிரகிருதியின் எல்லா அம்சங்களிலும் நான் இருக்கிறேன். இருப்பினும் என்னில் பிரகிருதி இல்லை” என்று கீதையில் கண்ணன் கூறுகிறானே அதன் அர்த்தம் இதுதான். அதாவது எல்லா பொருட்களிலும் மறைபொருளாக இறைவன் இருக்கிறான்.
 
ஆம்.
 
தங்கத்திலும், தகரத்திலும், அடுப்புக்கரியிலும் வெவ்வேறான அணுக்களே இருக்கின்றன என்றாலும் அவற்றில் உள்ள புரோட்டான், எலக்ட்ரான் போன்ற துகள்கள் ஒரே மாதிரியானவை.
 
தங்கத்தின் எல்லா அணுக்களிலும் உள்ள புரோட்டான், எலக்ட்ரான்களை கவனமாகப் பிரித்து எடுத்துவிட்டால் அது தகரமாக மாறிவிடும். இதேபோல் தகரத்தில் அத்தனை துகள்களை சேர்த்துவிட்டால் அது தங்கமாக மாறிவிடும்.
 
இத்தகைய ரசவாத வித்தைகளை சோதனைச் சாலைகளில் செய்துவிட முடியாது. ஆனால் நமது சித்தர்கள் தமது ஆன்ம வலிமையின் மூலம் செய்து காட்டினார்கள்.
 
வேதியியலின் எல்லா மட்டங்களிலும் எலக்ட்ரானும் அதன் சக்தியுமே முக்கிய வினைகளை ஆற்றுகிறது. இரண்டாவதாக அணுக்கரு இயற்பியலில் நியூட்ரான் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால் அனுக்கருவினுள் எலக்ட்ரான்களை பிடித்து வைத்திருப்பதை தவிர எந்த வேலையையும் புரோட்டான் செய்யவில்லை.
 
அப்படியே அதிகம் எழுதப்படும், பாடப்படும் கடவுளாக சிவனும், அதற்கடுத்தபடியாக விஷ்ணுவும் அமைந்துவிட்டனர். பிரம்மா ஓரங்கட்டப்பட்டு விட்டார்.
 
பிரம்மா, சிவன், விஷ்ணுவிடையே யார் பெரியவர், யார் சிறியவர் என்ற சண்டையெல்லாம் இல்லை.  அப்படி சண்டை இருந்திருந்தால் மூவரும் ஒன்றிணைந்து அணுவினுள் இருந்திருக்க மாட்டார்கள். உலகமும் இருந்திருக்காது.
 
அணுவினுள்ளே புரோட்டான், அல்லது எலட்ரானின் சக்தி குறையும்போதும், அதிகரிக்கும் போதும் அணுவின் சமநிலை பாதிக்கப்படுகிறது. ஆனால் நியூட்ரானின் எண்ணிக்கை எப்படி இருந்தாலும் சமநிலை பாதிக்கப்படுவதில்லை. இதைத்தான் வேதியியல் ஐசடோப்புகள் என்கிறது.
 
ஆக்கும் வேலையோ, அழிக்கும் வேலையோ அதிகரித்து விட்டால் உலகில் சமநிலை பாதிக்கப்படுகிறது. ஆனால் காக்கும் வேலை அப்படி அல்ல. அப்படியே விஷ்ணுவின் அவதாரங்களும்.
(தெரிவார்...)