யாகம் (தூத்துக்குடி )

anusuya
May 23, 2018 08:44 முப
இதிகாசங்களில்
கேள்வி பட்ட
அத்தனை அரக்கணும்
ஒன்று சேர்ந்த 
ஒற்றை உருவமாய்
ஒரு ஆலை
உயிர் குடித்து,
கரு அறுத்து,
 உல்லாசமாய் உலா
வரக் கண்டோம்

அரக்க வதைக்கு
நாங்கள் யாகங்கள் 
செய்தோம்

உண்ணா நோன்பு
இருந்தார்கள் 
எங்கள் மக்கள்
தந்திரம் உடைக்கும்
மந்திரங்கள் 
தொண்டை வற்ற
கத்தினார்கள்

இப்படி 
வித விதமாய்
வளர்த்து வந்தோம்
எங்கள் யாகம்

நூறு நாள்
நெருங்கிற்று
எங்கள் யாகம்

எல்லோரும்
ஒன்று திரண்டு
பெரிதாய்
யாகம் வளர்க்கப்பட்டது

முதலில் எங்கள்
யாக நெருப்பில்
சில டயர்கள்
விழுந்தன

பின் நெய்களுக்கு
பதிலாக
இரத்தம் வார்க்கப்படது

பின் விறகு
குச்சிகளுக்கு
பதிலாக
தோட்டாக்கள்
துளையிட்ட
சடலங்கள்
வீசப்பட்டன

எங்கள் யாகத்தில்
எங்கள் சகோதரிகளின்
உடல்கள் எரிக்கப்படுகின்றது

அரக்கன் அல்ல
அரக்கன் ஆணையிட
பொம்மைகள் கூட
கொலை வெறியுடன்
கோர தாண்டவம்
ஆடுகின்றன

பிணந்தின்னி
கழுகுகள்
ஒய்யார 
வட்டமிடுகின்றன

நாளை
என்ன நடக்கும்
இன்று இரவு
இன்னும் எத்தனை
உயிர்கள்
விடை பெறும்
இதயம் படபடக்க
கண்ணீர் வற்றிய
தூக்கம் மறந்த
கண்களோடு
பரிதவித்து கிடக்கிறது
மே 22 ன்
கொடூர இரவு