வரலாற்றுச் சிறப்புமிக்க ஹார்வார்ட் தமிழ் இருக்கை கனவு நிறைவேறியது ..

R.S.ALLWIN
May 18, 2018 12:43 பிப
அனைவருக்கும் வணக்கம்!
ஹார்வார்டில் தமிழ் இருக்கை அமைக்கும் மிகப்பெரிய சாதனை நிகழ்வு, உலகத் தமிழர்களின் முழுமையான ஒத்துழைப்புடன் மே, 2018-ல் நிறைவேறியது. ஹார்வார்ட் பல்கலைக்கழகக் குழுவுடன் இறுதிப் பேச்சுவார்த்தை நடத்தி, மீதம் கொடுக்கவேண்டிய தொகையை கையளித்து திரும்பிய ஹார்வார்ட் தமிழ் இருக்கை செயற்குழுவின் சார்பாக முனைவர் சொர்ணம் சங்கர் இந்த தகவலை தெரிவித்தார்.

தமிழ் பல்வேறு பெருமைகளை கொண்டிருந்தாலும், உலகின் தொன்மையான மொழியாக விளங்கினாலும், கடந்த பல ஆண்டுகளாக அதற்கு கிடைத்திருக்க வேண்டிய பெருமைகளும், சிறப்பும், உலக அங்கீகாரமும், ஆராய்ச்சி வசதிகளும் இன்னும் கிடைக்கவில்லை என்பதே உண்மை.

இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையில் கலந்துகொண்ட திருமதி.வைதேகி ஹெர்பர்ட், மருத்துவர் சம்பந்தன் மற்றும் மருத்துவர் ஜானகிராமன் ஆகியோரது சந்திப்பில் உதித்த சிந்தனைதான் இந்த ஹார்வார்ட் தமிழ் இருக்கை... மேலும்...

valaitamil.com/Harvard-Tamil-Chair-completed_17308.html?utm_source=newsletter&utm;_medium=email&utm;_content=weeklynewsletter&utm;_campaign=newsletter17052018