என் நினைவோடைக் குளிர்த்தென்றலே

KalpanaBharathi
May 09, 2018 03:18 பிப
நீரோடைச் சலனங்களில் நீ நின்ற கால் கொலுசோசை கேட்குதடி
நினைவோடைச் சலனங்களில் உன்னிதழ் தமிழோசை கேட்குதடி
மலராடை போர்த்திய தோட்டத்தில் உன் மௌன மொழியோசை கேட்குதடி
குளிர்வாடை வீசும் நதியோரத்தில் உன் குவிந்த இதழ் முத்தத்தின் சப்தமடி
நிழலாடை போர்த்திய நீரோடையே என் நினைவோடைக் குளிர்த்தென்றலே !