நெஞ்சவீதி யில்நீ மதி

KalpanaBharathi
ஏப்ரல் 21, 2018 07:52 பிப
வண்ண நிலவுக்கு வானம் எழில்வீதி
எண்ணக் கனவுக்கு பொன்னித யம்வீதி
கொஞ்சும் கவிதைக்கு செந்தமிழ் பொன்வீதி
நெஞ்சவீதி யில்நீ மதி .


பாண்டிமா விரும்பியபடி ரதியான இன்னிசை வெண்பா :

வண்ண நிலவுக்கு வானம் எழில்வீதி
எண்ணக் கனவுக்கு பொன்னித யம்வீதி
கொஞ்சும் கவிதைக்கு செந்தமிழ் பொன்வீதி
நெஞ்சவீதி யின்ரதி நீ