நண்பனோடு

KalpanaBharathi
மார்ச் 21, 2018 11:16 முப
நண்பனோடு காலார நடப்பது மகிழ்ச்சி
காதலியோடு கைகோர்த்து நடப்பது மகிழ்ச்சி
கவிதையில் சொல்லோடு நடப்பது மகிழ்ச்சி
மழையில் குடையின்றி நனைவது மகிழ்ச்சி
கோடையில் மரநிழலில் நிற்பது மகிழ்ச்சி
மாலையில் அவள்வரக் காத்திருப்பது மகிழ்ச்சி
தெருவோரத் தேநீர்க்கடையில் பருகுவது மகிழ்ச்சி
தென்னங்கீற்று நிழலில் இளநீர் அருந்துவது மகிழ்ச்சி
பனைமரத்து பதநி பருகுவதற்கு ஈடு ஏது மகிழ்ச்சி
இணையத்தில் நண்பர்களோடு இதைப் பகிர்வது மகிழ்ச்சியிலும் மகிழ்ச்சி !