அந்த எந்திரம் 100 ரூபாய் துப்பியிருக்கலாம்

கல்யாண கண்ணன்
மார்ச் 06, 2018 12:26 பிப
நாளை முதல் வேலையாய் மாதம் ரெண்டாயிரம் கடன் வாங்கி பொழப்பு நடத்தும் வருமானம் தான் என் வருமானம் என்பதை இந்த வங்கிகளுக்கு சொல்லவேண்டும். அவர்களின் எல்லா கணக்கும் சரிதான். பெங்களூரில் தான் வேலை பார்கிறேன். IT company அதிகம் உள்ள பகுதியில் தான் இருக்கிறேன். IT -யில் தான் வேலை பார்கிறேன் இதுவரை சரி. ஆனால் அவர்கள் நினைக்கும் சம்பளம் அல்ல. பாதி மாதத்தை தாண்டவே திண்டாட்டம். என்னால் 500 , 300 ,200 என்று தான் எடுக்க முடியும். 100 தான் அதிகம் எடுப்பேன் ATM-ல் இருந்து. எல்லா வங்கி ATM-மும் சொல்லிவைத்தாற்போல் குறைந்தது 500 தான் எடுக்கம் முடியும் என்று ஏளன சிரிப்பு சிரிக்கிறது.ஒரு 100 ரூபாய்க்கு 1.5 KM நடைவேறு. உங்களின் இந்த விளையாட்டை உங்களின் அந்த கோல்டன் வாடிக்கையாளரிடம் வைத்து கொள்ளுங்கள் என்று சொல்லவேண்டும்.அவர்கள் என்னை வெளியே தள்ளலாம். அந்த பன்னாட்டு வங்கி வாடிக்கையாளர்கள் அந்த ATM எந்திரத்தைவிட ஏளனமாக பார்க்கலாம். ஆனால் சொல்லியே ஆகவேண்டும். அந்த எந்திரம் அப்பொழுதே ஒரு 100 ரூபாயை துப்பியிருந்தால் எதிரில் வரும் இவர்களை போல் நானும் நடந்திருப்பேன். இப்பொழுது காரணமின்றி இவர்கள் மேல் கொலை வெறி வருகிறது. நானும் உலக பொருளாதார சூழ்ச்சி பற்றியெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கிறது. அந்த எந்திரம் ஒரு 100 ரூபாய் துப்பியிருக்கலாம். இப்பொழுது நடப்பவர்கள் பார்வை என்னை துச்சமாக பார்க்கிறது. அவர்களுக்கு இது புரியாது உங்களுக்கும் இது புரியாது உங்களின் கடைசி 100 ரூபாய் ஒரு எந்திரத்தின் வாயிலும் நீங்கள் ஒரு நவநாகரியத்தின் வீதியிலும் இருக்கும் பொழுது புரியும் நான் ஏன் அவர்களை கொலை செய்தேன் என்று.