மாதவிடாய் நிப்பினுக்கு கிடைத்த மவுசு

tharmetha
பிப்ரவரி 17, 2018 12:23 பிப

பாட் மேன் திரைப்படத்தின் வரவோடு சேர்ந்ததாக இந்தியாவின் திரையுலக பிரபலங்களால் பாட் மேன் சவால் முடுக்கி விடப்பட்டு உள்ளது. பெண்களின் மாத விடாய் கால நப்பின் அடிமட்ட மக்களுக்கும் கிடைக்க வழி செய்த அருணாச்சலம் முருகானந்தம் மேற்கொண்டிருந்த பகீரத முயற்சிகளை பாட் மேன் படம் பேசுகின்றது. இப்படத்துக்கு அதீத பிரசித்தியை ஏற்படுத்துவதற்காகவே பாட் மேன் சவால் முடுக்கி விடப்பட்டு உள்ளதாக சொல்லப்படுவதில் நிச்சயம் உண்மை இருக்கின்றபோதிலும் பேசப்பட கூடாத, அருவருப்பான ஒரு விடயமாக சமுதாயத்தால் பல நூற்றாண்டுகளாக பார்க்கப்பட்டு வந்திருக்கின்ற விடயத்தை பாட் மேன் சவால் கையில் எடுத்திருக்கின்றது.

திரையுலக பிரபலங்கள் பாட் மேன் சவாலை ஏற்று பெண்களின் மாத விடாய் கால நப்பினை கையில் வைத்து செல்பி எடுத்து சமூக தளங்களில் பதிவேற்றுகின்றனர். அத்துடன் சாதாரண மக்களையும் இவ்வாறு செய்ய தூண்டுகின்றனர். இது ஒரு விழிப்பூட்டல் செயற்பாடாக பரவலாக காட்டப்படுகின்றது.

தொடர்ந்து வாசிக்கவும், படங்களை பார்க்கவும்.....http://www.karaitivurep.com/?p=25879