சிந்தனைகள் சில....

சுவின்
பிப்ரவரி 14, 2018 02:09 பிப
கனவுகள் பலவற்றோடு படித்த ஏழையின் வாழ்வு
கனவாகவே இருந்தது - இறுதியில்
ஏழையின் வாழ்வும் கனவாகவே மாறியது – ஏனென்றால்
கனவின் தொடக்கமும் புரியாது முடிவும் விளங்காது.
 
வாழ்வை வாழ பழகியவன் ஏழையாகிறான்
வாழ்வை அழிக்க நினைத்தவன் செல்வந்தனாகிறான்.
 
கனவுகள் கலந்த வாழ்வு பயனற்றது
என்பது ஏழையின் நிலை – ஆனால்
கனவுகளை கலைத்து வாழ்வை பயனற்றவையாக
மாற்றுவது வாழ மறந்தவனின் நிலை.