இயற்கையோடு நான்

anusuya
பிப்ரவரி 06, 2018 08:43 பிப
நான்..

புற்களின் மடியில்
படுத்து உறங்கினேன் !

ஆறுகளோடு கதைகள்
பேசி நடந்தேன் !

காற்றோடு ஒப்பந்தம்
செய்து கைகுலுக்கினேன் !
மேகங்கள் பதுக்கி
வைத்த துளி நீரை
திருடி பருகி
என் மொத்த
தாகம் தீர்த்தேன் !

இயற்கையின் வண்ணங்களை
கொஞ்சம் குழைத்து
சாயம் பூசினேன் !

என்னோடு நானே
இல்லாத இந்த
பரிசுத்த தனிமையில் ...

இயற்கையின்
துகளிலெல்லாம்
தெறிக்கும் அழகினில்
இறைவனை உணர்கிறேன் ...... !