துன்பம் - ஓர் இணைப்பில்

சுவின்
ஜனவரி 26, 2018 03:10 பிப
துன்பம் - ஓர் இணைப்பில்

துன்பம் ஓர் இணைப்பின் கருவி
இழந்த உறவை இணைப்பது துன்பம்
மறந்த அன்பை நினைவூட்டுவது துன்பம்
செய்ததவற்றை உணர்த்துவது துன்பம்
பிறரதுநன்மைமட்டும் காண்பிப்பது துன்பம்
வாழ்வில் மாற்றத்தைகொணர்வது துன்பம்
அன்பை ஆழப்படுத்துவது துன்பம்
உண்மையை எடுத்தியம்புவது துன்பம்
இறைஉறவை புதுப்பிப்பது துன்பம்
மகிழ்ச்சியின் படிக்கற்கள் துன்பம்
கடந்தபாதையை உயிர்விப்பது துன்பம்
உள்ளத்தை உள்ளப்படிகாட்டுவது துன்பம்
எனவே
துன்பமே வெளிப்பாட்டின் இணைப்பு