சிந்தனை சில...

சுவின்
ஜனவரி 26, 2018 03:04 பிப
சிந்தனையால் நீ ஆளப்பட்டால் ஞானி
உன்னால் சிந்தனை ஆளப்பட்டால் நீ துறவி.

கடந்த நிகழ்வு கானலாகவும்
வரும் நிகழ்வு வைரமாகவும்
தோன்றலாம் - ஆனால்
நடப்பு நிகழ்வே உன் வரலாறாகும்.

என்னில் இல்லாத ஒன்றை வளர்க்க முயன்றேன்
இறுதியில் இருப்பதை இழந்தேன்.