தமிழ்த்தாய் திருவடி

செநா
ஜனவரி 26, 2018 10:20 முப
எத்தனை கோடி மொழிகள் கலந்தாலும்

எத்துணை இன்றியும் நீ நின்றிடுவாய்,

எத்தனை யுகங்கள் கடந்தாலும்

அத்தனை யுகங்களும் நிலைத்துடுவாய் ,

 

செந்தமிழ் ஊற்று சொல்லேடுத்து

தீந்தமிழ் நேசன் வழி  நடந்து

திசையெங்கும் தித்திக்கும் கவி

நான் பாடிடவேண்டும்,

 

செந்தமிழ் ஊற்று சொல்லேடுத்து

தீந்தமிழ் தாசன் வழி  நடந்து

ஊர்யெங்கும் புரட்சிகவி

நான் படைத்திடவேண்டும்,

 

எட்டுதிக்கும் உன்புகழ் பாடவேண்டும்,

எழுகின்ற பிறப்பெல்லாம்

என்னை நீ சுமக்க வேண்டும்

இல்லையென்றால்   இனி

எழமாலே உன் திருவடி சேரவேண்டும்