தேவதை ......

செநா
ஜனவரி 20, 2018 10:52 பிப
மாலைப் பொழுதினிலே 
தேரடி வீதியில் 
அவளைக் கண்டேன், 

மேகக்கூட்டங்களில் இருந்து வரும் ஒளிப் போல் 
சட்டென நெஞ்சில் நுழைந்துவிட்டாள், பட்டென உயிரில் கலந்துவிட்டாள்...

தாரணியில் வந்த தேவதையே தாவணியின் அழகைக் காண இருகண்கள் போதுமா, 

மெல்நடை கொண்ட அன்னமே
கொசுவத்தின் எடையை 
மெல்லிடை தாங்குமா, 

என்னை கவர்ந்தது ஏதோ; 
கையில் குலுங்கும் வளையலோ, காலில் இசைக்கும் கொலுசொலியோ,
காதோரத்தில் விளையாடும்கம்மலோ,
முகமதில் பதித்த மூக்குத்தியோ, மேனியில் படர்ந்த தாவணியோ, வேணியில் சூடிய மல்லிகையோ,

கண்டும் காணாமல் செல்லும் 
அவள் இருவிழியசைவுகளிலே 
என் இதயத்தைக் கவர்ந்துவிட்டாள், 

தமிழில் அழகியில் வார்த்தைகள் ஒவ்வொன்றாக கோர்த்து என்னிதயம் அவளிடம் தரச்சொல்லுதே-  இல்லையென்றால் 

தமிழ் என்று ஒற்றை வார்த்தையாவது
சொல்லச் சொல்லுதே, 
என் தாவணி பைங்கிளியே.....