குப்பையிலே போட்ட பண்டமும்

கா.உயிரழகன்
ஜனவரி 20, 2018 10:28 பிப
நான் ஒரு செல்லாக்காசென
நறுக்கிவிட்ட எல்லோரும் 
என்னை நாடுவதேன்
என்னிடம் ஏதோ இருக்கலாம்!
என்னை நறுக்கிவிட முன்
குப்பையிலே போட்ட பண்டமும்
ஒருவேளை தேவைப்படலாமென
நினைக்கத் தவறினர் போலும்!
நானோ தனிமைப்படுத்தப்பட்டதால் 
எனக்கு வேண்டிய எல்லாம்
நானே ஆக்க முனைந்ததால்
தன்னிறைவு பெற்றவனாக நான்!
உறவுகளே! - உங்களை
எவரும் ஒதுக்கி வைக்கலாம்
எவரும் தனிமைப்படுத்தி விடலாம்
எவரும் உதவாமல் ஒதுங்கலாம்
அதற்கு அஞ்ச வேண்டியதில்லை
எதற்கும் தன்கையே தனக்குதவியென
நெஞ்சை நிமிர்த்தி நடைபோடுங்கள்
கடவுள் கூட
உங்கள் பின்னே ஓடி வருவாரே!