கதறல்களின் தொகுப்பு

சுவின்
ஜனவரி 16, 2018 01:56 பிப


கருவறை
தாயின் கருவறையே
தமையனின் வாழ்வறை
காலம் கனிந்து சொல்லும் - அதுவே
உண்மையின் உறவறை

காலம்;;;;;
காலம் அறிந்தவன் கெட்டுப்போவதில்லை
காலம் கடந்தவன் வீழ்வதில்லை

தாயின் கதறல்
குழந்தாய்,
    நீ பிறந்தாய் என் வாழ்வே மகிழ்வானது,
    நீ வளர்ந்தாய் என் வாழ்வு அர்ப்பணமானது,
    நீ உயர்ந்தாய் என் வாழ்வு கேள்விக்குறியானது
             இது சரிதானே…!

ஏழையின் கண்ணீரிலே…

அன்பு இறைவனே!
        நான் என் தவறிழைத்தேன் 
        ஏன் இந்த துன்ப கிண்ணம்?
        என் பிறப்பும் ஏழ்மையிலே
        என் வாழ்வும் ஏழ்மையிலே
             ஏன்?
        தாழ்ச்சியில் தவழ்வது தவறா?
        உழைப்பில் திகழ்வது தவறா?
        இரக்கத்தில் வாழ்வது தவறா?
        பொய்மையில் வாழதாது தவறா?
        பெற்றோரை மதிப்பது தவறா?
        உம்மை பழிக்காதது தவறா?
        இருப்பதை பகிர்வது தவறா?
        உணர்வுகளை மதிப்பது தவறா?
        வாடியவர்களை கண்டபோது வாடியது தவறா?
        கள்வர்களாய் இல்லாதிருப்பது தவறா?
        என கேள்வி பல மனதை வாட்டுகிறதே
        என் தவறு நான் செய்தேன்,
        உணர்த்துமய்யா மனமிரங்கி
           இல்லையெனில்
        என்னை ஏன் படைத்தீர்?
        பாரினுக்கு பாரமாகவும்,
        கற்றவனுக்கு கபோதியாகவும்,
        பணத்திற்கு பஞ்சமாகவும்,
        என்னை ஏன் படைத்தீர்?
        மானிடனாய் பிறந்த எனக்கோ
        மானிட தன்மையும் கிடையாதோ?
        உடைந்த போன இதயத்தை சேர்க்கமாட்டீரா?
        கழன்று போன வாழ்வை இணைக்கமாட்டீரா?
        மதிப்பு வேண்டாம் - ஆனால்
        மாண்பையாவது தாரும்…!

மனதின் ஏக்கநிலை…!
இறைவா,
        உலகை காணும் வரை 
        கண்டேன் கனவுகள் பல – ஆனால்
        கண்டதும் வருந்தினேன்
        விலங்காய் தோன்றவில்லையே 
        ஏன்? ஏன்? தெரியுமா!
        அவற்றில் ஒற்றுமை வேர் உள்ளது - ஆனால்
        மனிதனிடம் பிரிவினை வேர் உள்ளது
        பறவையிடம் கண்டேன் ஒற்றுமையின் அழகை
        ஏழையிடம் கண்டேன் பகிர்வின் பண்பை
        பழைமை மறந்தவனிடம் கண்டேன் சுயநலத்தை
        இவர்களிடம் சொல்லக்கூட குறைகள் இருக்கிறது பல
        ஆனால் நேரமில்லை கேட்பதற்கு இவர்களுக்கு
        இப்பொழுது புலம்புகிறேன் சுவரிடம்
        சொல்கிறார்கள் பைத்தியக்காரன் என்று…! 


அன்புள்ளவனின் தன்மை!        
        அன்பு ஒருவனை முட்டாளாக்குகிறது
        அன்பு ஒருவனை பைத்தியமாக்குகிறது
        அன்பு ஒருவனை குருடனாக்குகிறது
        அன்பு ஒருவனை வெகுளியாக்குகிறது
        அன்பு ஒருவனை ஏழையாக்குகிறது
            ஏனென்றால்
        அன்பு செய்பவன் தன்னிலை 
மறந்து நம்புகிறான் அனைவரையும்
வெம்புகிறான் வாழ்வையே இழந்து
    ஆனால்
மனிதனாகிறான் இவ்வுலகை வென்று.


தாயின் கதறல்;;
    மகனே!,
        நான் உன்னை பெற்றபோது வழியில்லை
        ஏனென்றால் என உயிரே நீதான்
        மழலை பருவத்தில் இதயத்தை மிதித்தாய் 
        சுகத்தின் தன்மையை உணர்ந்தேன்
        உன் தவறால் பிறருடைய வன்சொற்கள்
        என்னைக் காயப்படுத்தியது – ஏன்?
        அது உன் தவறு தவறல்ல என் தவறு
              ஆனால்
        இளமையின் துடிப்பால் மறந்தாய்
        எங்களை விழுந்தாய் சேற்றிலே
        உன்னை காப்பாற்ற விரைந்தேன் - ஆனால்
        என்னை விழ செய்து நீ சென்றாய்
        இருப்பினும் உன்னை அன்பு செய்வேன் - ஏனென்றால்
        நீ என் செல்வம், கொடை
        என்னை சேர்த்தாய் மடத்தில் - ஆனால்  
        உன் நினைவு என்னில்
        இவ்வுலகை இழந்தாலும் மறு
        உலகுவரை அன்பு செய்வேன் உன்னை – ஏனென்றால்
        நான் உனக்குள் குருதியாய் இருக்கிறேன்
        மறவாதே உன்னை நேசிப்பவரை…!!!

ம. மரிய சுவின்