தோழமை

சுவின்
ஜனவரி 16, 2018 01:32 பிப

தோழமை

துன்பத்தில் துவண்டு இன்பத்தில் இணைவது
மட்டுமல்ல நட்பு – மாறாகச்
சாவை கடந்து வாழ்;வாக இணைவதும்
தரித்திரத்தை உடைத்து சரித்திரம் படைக்க வைப்பதும்,
நொறுங்கிய இதயத்தை சிதறாமல் சேர்ப்பதும்
கலங்கிய உள்ளத்தை கரை சேர்ப்பதும்
உரு இழந்தவனுக்கு உரு கொடுப்பதும்
கண்ணீரால் நிரம்பிய கண்களை துடைப்பதும்
தடம் மறந்தவனுக்கு தடத்தை காட்டுவதும்
கலங்கய உள்ளத்தை சொல்வின்றி அறிவதும்
பாரினை காண இயலாதவனுக்கு பார்வையாய் இருப்பதும்
ஒலி இல்லாதவனுக்கு ஒலியாய் இருப்பதும்
அருகிலிருந்து அணைப்பதை விட
தொலைவிலிருந்து எண்ணத்தை எண்ணமாக்குவதும்
சான்றோனே கூறினும் ஜயம் இல்லாமல் இருப்பதும்
இன்னும் கூறலாம் பல – ஆனால் என்னில் இருப்பாதோ சில


இன்றோடு முடியவில்லை எனவே இறுதி வரிகளை அவ்வாறு அமைத்தேன். மேலும் இவ்வுலகில் எனக்கு தெரிந்தளவில் இரண்டு வார்த்தைகளுக்கு மட்டும்எவராலும் இலக்கணம் தர முடிவதில்லை ஆனால் ஒருவரால் மட்டுமே அதை வாழ்ந்து காட்ட முடியும், ஏன் வாழ்ந்தும் காட்டியுள்ளார். அதுதான் நம்மை படைத்த இறைவன். அவ்வார்த்தைகள்,

அன்பு
நட்பு


ஆகிய இவைகளே. ஆனால் அவ்விரண்டும் ஒன்றோடொன்று பின்னிபினைந்தவைகள்.
ஏனெனில் இவற்றில் ஒன்றான “அன்பு” என்பது பண்பை குறிக்கும். மற்றொன்றான “நட்போ” உறவை குறிக்கும்;
இப்பகுதியில் நான் என் சொந்த அனுபவத்தில் அடிப்படையில் “தோழமை” (அ)“நட்பு” கற்றி கூற விழைகினறேன். இவற்றை ஒரு கதையோடு தொடங்குகினறேன், அதுவே முழுமையாக அமையலாம்.

ஒரு அழகிய கிராமம். அக்கிராமத்தை சுற்றிலும் நன்கு வளமையான மரங்கள், செடிகள் மற்றும் கொடிகள் காணப்படுகின்றன. எனவே அவ்வூரை “பஞ்சவண்ணம்” என்று அழைப்பார்கள். ஆனால் அவற்றின் மெய்யான பெயரோ “கலகப்பட்டி” இப்பெயருக்கோ ஒரு வரலாறு உண்டு, மேலும் அது எவ்வாறு பஞ்சவண்ணம் எனறு பெயர் பெற்றது எனறும் கூறலாம்.இவற்றற்கு மிக முக்கிய காரணம்  சிவா மற்றும் சூர்யா என்ற இரு இளைஞர்கள். உடனே நீங்கள் தவறாக எண்ண வேண்டாம் இருவரும் நண்பர்களென்று கதையில் வருவதை கவனியுங்கள்.கலகப்பட்டியில் நடுநிலைப்பள்ளி உள்ளது. சுற்றுப்பட்டியிலுள்ள அனைவரும் இங்கே தான் படிப்பார்கள். அவ்வாறு படித்தவர்கள்தான் இந்த சிவாவும் சூர்யாவும். இவர்கள் அருவரும் சிறுவயது முதலே மிகப்பெரிய எதிரிகள். ஆனால் இவற்றின் வெளிப்பாடோ கல்லூhயிpல் வெளிப்பட்டது. இவர்களுக்கிடையே சில ஒற்றுமைகள் உள்ளன. அவைகள்,

அன்புக்கு அடிமையாவது
பிடிவாதம்
வெற்றிக்கான வெறி
எளிதில் பிறரை நம்புவது.


ஆகும். ஒருமுறை கல்லூரியில் கிரிக்கெட் போட்டிகளானது துறை வாரியாக நடைபெற்றது. அவ்வாறு வணிகவியல் துறை சிறப்பு பிரிவுக்கும், வணிகவியல் துறைக்கும் இடையே நடைபெற்றது. வழக்கமாக இரண்டும் இணைந்து ஒரே அணியாக களமிறங்குவார்கள். இவர்கள் சேர்க்கை இத்துறைகளின் பிரிவாக மாற்றக்கண்டது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே வணிகவியல் துறையின் தலைவராக சிவாவும், சிறப்பு பிரிவின் அணியின் தலைவராகசூர்யாவும் வந்து டாஸ் கேட்டார்கள். இவற்றில் வெற்றி பெற்று முதலில் ஆடியும், மேலும் ஆட்டத்தில் வெற்றி பெற்றது வணிகவியல் துறையே. இதனால் இன்னும் குழுக்களிடையுமே இன்னும் பிரச்சனை அதிகமானது. ஒருநாள் கல்லூரி முதல்வரும், விளையாட்டுத் துறைத் தலைவரும் இனணந்து ஒரு அறிக்கைத் தகவல்களை வெளியிட்டனர். அதுவே பலகலைக்கழகம் சார்பாக அனைத்துக் கல்லூரிகளுக்கிடையே கிரிக்கெட் போட்டி நடத்தப்படப் போகிறது, எனவே நாங்கள் நம் கல்லூரியில் முதலிடம் வகிக்கும் வணிகவியல் துறையை அனுப்பலாம் என்று நினைத்துள்ளோம். எனவே இன்று மாலைக்குள் நீங்கள் அனைவரும் இணைந்து பேசி முடிவெடுத்து, மாற்றுக்கருத்து இருப்பின் அதை உங்கள் மாணவ தலைவர் மூலமாக தெரிவிக்கவும் என்று கூறினார். இக்கூட்டத்தில் நாங்கள் கலந்து கொள்ள நீங்கள் விரும்பினால் மதியம் கூட்டம் நடைபெறும் இதற்கு அனைவரும் சம்மதித்தனர். எனவே ஒரு மணிக்கு கூட்டம் ஆரம்பமாகியது. கிட்டத்தக்க முடிவு நெருங்கும் வேளையில் அதாவது ஆசிரியர்களின் முடிவு சரியாகும் நிலையில் சிவா எழுந்து தனது கருத்தை வெளிப்படையாக கூறினார். அதுவே, உங்களுடைய முடிவு சரியானதாக இருப்பினும் இதில் எனக்கு உடன்பாடு இல்லை எனறான். உடனே முதல்வர், ஏன்? உங்கள் அணி, நீதான் தலைவர் பின்பு எதற்காக உடன்பாடு இல்லை எனத் தெரிந்து கொள்ளலாமா? நீங்கள் கேட்பதால் நான் கூறுகிறேன் எனத் தொடங்கினான் சிவா. “சார், துறை வாரியாக என்றால் இந்த முடிவை ஏற்றிருப்பேன் ஆனால் கல்லூரி என்று சொல்லும் போது அவற்றில் துறை என்பது ஒரு பகுதியே தவிர அது முழுமையாக இருக்க முடியாது. எனவே எங்களை முழுமையாக இருக்க விடுமாறு நான் விரும்புகிறேன். வேண்டுமென்றால் ஒவ்வொரு துறையிலிருந்தும் வீரர்களை தேர்வு செய்யலாம், அவ்வாறு செய்யும் போது கல்லூரி என்ற நிலையில் பங்கேற்பது என்ற ஒரு பொருளைத் தரும். எனவேதான் எனக்கு உடன்பாடு இல்லையென்றேன்”. உடனே முதல்வரும் இதனை பாராட்டி விட்டு அவ்வாறே செய்வோமா எனக் கேட்டார். அதற்கு அனைவரும் சரி என்று சொல்லிவிட்டு ஒரு நிபந்தனை விதித்தனர், உடனே விளையாட்டு துறைத் தலைவர் முடிந்தது அவ்வளவு தான் என்ன நிபந்தனையோ தெரியவில்லையே, எப்படியும் நமக்கு எதிராகத் தான் இருக்கும் என எண்ணிக் கொண்டார். அதுதான்  நீங்கள் எப்படி வேண்டுமென்றாலும் அணியை உருவாக்குங்கள் ஆனால் அணித் தலைவராக சிவா தான் இருக்க வேண்டும் என்றனர். இதை சிறப்பு பிரிவை சேர்ந்த எந்த துறையும் ஏற்கவில்லை. அதிக பெருபான்மை இருந்ததால் சிவாவே தலைவராக நியமிக்கப்பட்டு அவனிடமே வீரர்களை தேர்வு செய்யும் பொறுப்பும் கொடுக்கப்பட்டது. அவனும் சரி என்று கட்டாயத்தின் பேரில் ஏற்றுக் கொண்டான். மறுநாள் காலையில் யாருமே எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது. அதுதான் அந்த பட்டியலின் வெளிப்பாடு. அனைத்து துறைகளிலிருந்தும் வீரர்கள் எடுக்கப்பட்டனர். குறிப்பாக வணிகவியல் சிறப்பு பிரிவிலிருந்து 4 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள்தான் சிவாவின் முக்கிய எதிரிகளாக அவர்களே தங்களை எண்ணிக்கொண்டனர். இன்னுமொரு அதிர்ச்சி என்னதுனா? அணியின் துணைத்தலைவராக மற்றும் பயிற்சியாளராக சூர்யாவின் பெயர்க்குறிப்பிடப்படடிருந்தது. எல்லாமே அவர்களே முக்கியத்துவம் பெற்றாலும் சிவாவின் மீது வெறுப்பு இருந்தது. போட்டியின் நாள் வந்தது அனைவரும் சென்றார்கள். இதற்கு முன்பாக இவர்கள் வென்றதே இல்லை, மேலும் இதுதான் முதன் முறையாக அனைவரும் சேர்ந்து செல்வது. எனவே அனைவரின் கனவும் வெற்றி அடைவதாபவே இருந்தது. ஓரளவு அனைத்திலும் வெற்றிப்பெற்று அரையிறுதியில் நுழைந்தனர். அப்போட்டியில் மிகவும் பலம் வாய்ந்த, கடந்த 7 ஆண்டாக வெற்றி கோப்பையை தன்னகத்தே கொண்ட அணியான சு.மு கல்லூரிக்கெதிராக இருந்தது. இப்போது அணியின் தலைவர்கள் டாஸினை கேட்க களத்திற்கு வந்தனர். இவற்றில் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது து.மு கல்லூரி. அப்போது, மற்ற போட்டிகளில் வெற்றி மட்டுமே என்ற குறிக்கோளோடு விளையாட தங்கள் வீரர்களை வற்புறுத்திய சிவா, முதன்முறையாக உங்கள் விருப்பம் போல் ஆடுங்கள் என்றான், ஆனால் இலக்கு தீர்மானித்து ஆடுங்கள் என்றான். ஆனால் ஒரு மாற்றம் தொடக்க ஆட்டக்காரர்களில் வழக்கமாக சிவாவும் மூர்த்தியும் இறங்குவர். இம்முறை சிறப்புபிரிவை சேர்ந்த சூர்யா மற்றும் சுரேஸை களமிறங்க பணித்தான் சிவா. இதுவே இந்த ஆட்டத்திலும் சரி, கலு;லூரியில் மிகப்பெரிய மாற்றமாக அமைந்தது. இது என்று சொல்லும் போது களமிறக்கப்பட்டதல்ல மாறாக அப்போது அவன் சொன்ன வார்த்தைகளே முக்கிமானதாக அமைந்தது. அதுவே,“முந்தைய போட்டிகள் முக்கியமல்ல ஆனால் இது மிக முக்கியமானது எனவே நீங்கள் இருவருமே சரியான தொடக்கத்;;தை மட்டுமல்ல வெற்றியையும் தர முடியும்”என்று சொன்னதாகும்;. அப்போது கோப்பையை கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியையும், சாதனையையும் பதிவு செய்தது அக்கல்லூரி. ஆனால் சிவாவிற்கு உண்மையான சோதனை அப்பொதுதான் ஏற்பட்டது. சிவாவும் சூர்யாவும் இனைந்த தருணம் அவர்களின் கிராமங்களுக்கிடையேயான பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து சடலங்கள மற்றும் காயங்களுடன் பல பேர் கிடக்கும் அவலம். சிவாவிற்கு கலகப்பட்டி மற்றும் சூர்யாவிற்கு சிங்கப்பட்டி ஆகும். பல வருடங்களாக காத்திருந்து ருசிக்க முடியாமல் பெற்ற வெற்றியை கல்லூயில் ஒப்படைத்து விட்டு உடனே அவர்களுடைய கிராமத்திற்கு விரைந்தனர். இந்த கலவரம் கல்லூரியிலுள்ள மகிழ்ச்சிக்கு பதிலாக ஒவ்வொருவர் மனதிலும் கலக்கத்தை ஏற்படுத்தியது. எவ்வாறெனில்,

“இணைந்த இருகரங்கள்
பிரியும் வேளை வந்ததோ,
இதனால் மீளுமா கல்லூரிச் சாலை”


இவையே இந்த கலக்கம். கலவரம் தீவிரமாகும் வேளை இரு கிராமத்தாரும் மீண்டும் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள இணைந்த இடத்தில் இவர்கள் இருவரும் இணைந்தனர். அனைவரின் கண்களில் ஒருகணம் வியப்பை காண முடிந்தது. அதனை பயன்படுத்தி சற்று தாமதிக்காமலும், சிந்திக்காமலும் சிவா கூறியது, மேலும் வியப்பை ஊட்டியது சூர்யாவுக்கு, அதுவே இருவரும் வருவதை அறிந்து எவ்வளவு ஒற்றுமையாக இரு கிராமத்தாரும் எங்களை வரவேற்க வந்துள்ளீர்கள் என்று.
இதனைக் கேட்ட அனைவரும் மௌனம் சாதித்தனர். ஏனென்றால் இரு கிராமத்து மக்களும் இவர்களை மிக உயர்வாக மதித்தனர். மேலும் இவர்களது பேச்சுக்கு வேறு மறு பேச்சே சொல்லாமல் களைந்து செல்வர். எனவேதான் மௌனம் சாதித்து பிரச்சனைகளை மேற்கொள்ளவில்லை. சிவாவின்மேல் மேலும் மேலும் நம்பிக்கையும், அன்பும் அதிகரித்தது சூர்யாவுக்கு. பின்பு இருவரும் இணைப்பிரியா, எடுத்துக்காட்டான நட்பு வாழ்க்கை வாழ்ந்தனர். ஆனால் ஒரு இழப்பு ஏற்பட்டு இரு கிராமத்தாரை உலுக்கியது. மேலும் உண்மையான உறவையும் வெளிக்காட்டியது, அதுதான் இளம்வீரரும், பலவற்றிற்கு தலைவனாக இருந்தவனுமான சிவாவின் இறப்புதான் அது. இது இயற்கைiயாகவோ, விபத்தினாலோ ஏற்ப்பட்டது இல்ல மாறாக சிங்கப்பட்டியின் இளைஞர்களால் ஏற்ப்பட்டதே இத்துயரச் சம்பவம். இதனை அறிந்தும் கலகப்பட்டி அமைதியாக இருந்தது. ஏனென்றால் சிவாவின் இறுதி வார்த்தையின் வரிகளான,
    
 
“ஆடி அடங்கும் வாழ்க்கையில் அடிதடி
  வேண்டாமே, - ஏனென்றால்
     மடிவது சடலம் மட்டுமல்ல மாறாக உயிர்களும் 
  மீண்டும் பெற முடியுமா”.
              மேலும் குறிப்பிட்டு கூறியது,
     “என் இறப்பு என் தோழனின் 
     இதயத்தை வாட்டுமப்பா – அதனால் 
     விழிகளிலிருந்து விழும் கண்ணீர்
     இம்மண்ணை  அடைவதற்குள் அதனை 
துடைப்பீர்களாக”


என்றதும் உயிர் பிரிந்தது. இதுதான் அனைவரையும் உலுக்கியது, திருந்தவும் வைத்தது. அதன்பின் சூர்யாவும் அறிந்து கொண்டான் சிவாவைப் பற்றிய சில உண்மைகளை. கல்லூரியில் இருபிரிவினருக்குமிடையே சண்டைகள் வரும்போது சூர்யாவைவிட சிவாவே அதிகம்   பாதிக்கப்படுவான். ஆனால் பணிய மாட்டான். இதை ஒருநாள் மற்ற துறையை சார்ந்தவர்கள் நெடுநாள்களாக கவனித்துக் கொண்டு சிவாவிடம் கேட்டனர். அதற்கு அவன் கூறியது,
          
           “பட்டி ரெண்டும் அழியுது கலவரத்தால்
          கல்விக் கூடம் முடங்குது எங்களால் - எனவே
            வேண்டாம் கலவரம் இங்கே”
                        தொடரட்டும் சமாதானம் அங்கே”

               
 
உண்மையிலே இதைக் கேட்டதும் சூர்யாவின் கண்கள் மூழ்கியது. உடனே அவனது இறப்புக்கு காரணமாக இருந்த நான்கு பேரை அழைத்து காவல்துறையில் ஒப்படைத்து தன் கிராமத்தாரை வாட்டி எடுத்தான். அன்று முதல் இரு கிராமங்களும் இணைந்து பல மரங்களை வளர்த்து மட்டுமன்றி இரண்டும் சேர்ந்து ஒரேகிராமம் ஆனது, அதுவே பஞ்சவண்ணம் எனப்பெயர்ப்பெற்றது.

இப்போது, நீங்கள் கேட்கலாம் இக்கதைக்கும் தோழமைக்கும் என்ன ஒற்றுமையென்று. ஆனால் பல ஒற்றுமைகள் உள்ளன என்று நான் ஆணித்தரமாகச் சொல்வேன். எனவேதான் தொடக்கத்திலே சிலவரிகளை எழுதினேன். அத்தகையும் நீங்கள் காணலாம். ஆனால் இது முதலில் ஒருதலை நட்பாக இருந்து பின்பு இருதலை, பல தலை என உருவாகியது. இக்கதையில் உயிர் என்ற பொக்கிஷம் அழிந்த பின்னரே நட்பின் அருமை மற்றும் அன்பின் அருமையை அறிந்துக்கொண்டனர் சூர்யாவும் பலரும். ஆனால் நாம் அவற்றை அனுபவமாக பெற முயல வேண்டும்.

இவ்வுலகில் தாயன்புக்கு அடுத்து, சிலருக்கு அதற்கு இணையாக என்றாலும் சற்று குறைந்ததாக இருப்பது நட்பு. இது என்னுடைய நட்பு.
நட்பைப் பற்றி விளக்க நினைக்கிறேன் ஆனால் வார்த்தைகள் இல்லை. ஏனெனில் அது உன்னதமான உறவின் அனுபவம். மொத்தத்தில் அனைத்தும் அன்பின் வெளிப்பாடகும். தாயிடமிருந்து வெளிப்படுவது தாயன்பு. ஓர் ஆணையோ, பெண்ணையோ பார்த்தவுடன் இவர்களே என் துணைவர், துணைவியர் என எண்ணிக்கொள்ளும் அன்பு காதல். ஆனால் தாயைப் போல எதிர்ப்பார்ப்பின்றி சொல்லின்றி உள்ளத்தை அறிவது உயிரோடு உயிராக கலந்து சொல்ல முடியாத, அளித்திட முடியாத அனுபவத்திலே பெறுகின்ற அன்பே நட்பன்பு. எனவே நட்பை போற்றுவோம்,அன்போடு வாழ்வோம், வாழ்வில் சிறந்த இடம்பெறுவோம்.
          
           வார்த்தையால் விளக்கமுடியாத,
          அனுபவத்தாலே உணரக்கூடிய
              அன்பே “நட்பு”
          உணர்வோம்      வாழ்வோம்
              பெறுவோம் நட்பின் அனுபவம்.

         
“நட்பின் அனுபவத்தை பெற வாழ்த்துக்கள்.”
  ம.மரிய சுவின்