தாய்மையிலும் நட்பு

சுவின்
ஜனவரி 14, 2018 02:24 பிப
 
                                                                                  தாய்மையிலும் நட்பு

பெண்ணே!
     நீ ஆணவத்தை பெற்றாய்
     அடக்கத்தை வெறுத்தாய்,
     காதலை பெற்றாய்
     உறவை பெற்றாய்,
     அறிவை பெற்றாய்
அன்பை மறந்தாய்,
சுதந்திரத்தை ரசித்தாய்
தாய்மையை அழித்தாய்


           ஆம், இக்காலத்தில் சில பெண்கள் இவ்வாறே உள்ளனர். ஆனால் அக்காலத்தில் தாய்மை என்பது ஒரு பொக்கிஷம். எனவே அன்று

பெண்ணே!
     “நீ பெற்றிருக்க வேண்டியவை
     அன்பை வாழ்வாக்கு
     அடக்கத்தை உனதாக்கு
     வெட்கத்தை தனதாக்கு
     உறவை மனதாக்கு
தாய்மையை நனவாக்கு”


     அன்று தாய்மை என்றபேறு இல்லையேல் ,அப்பெண்ணின் நிலைமை அந்தோ பரிதாபம்தான். தாய்மைபேறு இல்லாதவருக்கு அக்காலத்து மக்கள் கொடுத்தபட்டப்பெயர் மலடி. ஆம் இவ்வார்த்தையை கேட்கக்கூடாது என்பதற்காக கோவிலுக்கு செல்வார்கள், வைத்தியர்கள் என பலரிடம் செல்வார்கள். அப்படி சென்று குழந்தைப்பாக்கியம் பெற்றுவிட்டால் அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனால் இன்றைய காலத்தில் அதற்கு நேர்மாறாக நடக்கிறது. எவ்வாறெனில் குழந்தைகளை பெற்றுகுப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு செல்வார்கள். குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் கடவுளிடம் வேண்டுவது,
 
 
 
இறைவா,
            “ஆடம்பரமான செல்வமும் 
           ஆழகான வாழ்க்கையும்
           கொடுத்தாய் - ஆனால்
           வாழ்கையின் நிஜம் எங்கே?
           வாழ்க்கையின் கொடை எங்கே?
           வாழ்க்கையின் உறவு எங்கே?
           வாழ்க்கையின் பரிசு எங்கே?"


                இவற்றை தராமல் ஏன் வாழ்க்கையை கொடுத்தாய்? –ஏன் எங்களை உலகில் தோன்றவைத்தாய்? பிறருடைய ஏளனத்திற்கு உள்ளாகவா? அல்லது மகிழ்ச்சியற்ற வாழ்க்கையை வாழவா, அல்லது பிறருடைய மகிழ்ச்சியை அழிக்கவா, ஏன்? ஏன்? ஏன்? சொல், சொல் என வேண்டுகின்றனர். ஆனால் குப்பைத் தொட்டியில் எடுக்கப்பட்ட குழந்தையின் கண்ணீர் கூறுகிறது, நான்(குழந்தை) வேண்டாம், ஆனால் உறவு வேண்டும், அதே குழந்தை உலகத்தை கண்டது மீண்டும் கூறுகிறது, இருள் சூழ்ந்த உலகில் பத்து மாதம் சிறைப்பட்டேன், பின்பு புதிய உலகைக் கண்டேன் மகிழ்ந்தேன், ஆனால் பிறகுதான் தெரிந்தது இறக்கும் வரைசிறை என்று. இதுதான் இன்றைய உலகம் என்று அறிந்து கொள்ள வேண்டும். இன்றைய உலகில் முதியோர் இல்லத்தின் வரவு அதிகமாகக் காரணம் அன்பு, பகிர்ந்துக்கொள்ளுதல் இவைகளைப் போன்று பல காரணங்களை சொல்லலாம். இவைதான் இன்றைய உலகில் இருக்கும் அதிகமான பஞ்சம்.
 
அன்பு:

     “ஓடி உழைக்க மனமிருந்தது–ஆனால்
     உண்ண மனமில்லை,
     நேரத்தை உருவாக்க மறந்தேன்
     உறவோடு உறவாட,
     என்னை மறந்து பிறரை அழித்தேன்
     காரணம் அன்பு இல்லை,
     உலகமெல்லாம் தேடினேன் - ஆனால்
     என் உயிரை மறந்தேன்,
     அதுதான் என் தாய்.”


           அன்பிற்கு இலக்கணம் கேட்டால் வருவது பல, ஆனால் இறுதியில் முடிவது ஒன்றில் அதுதான் தாய். அன்பிற்கு இலக்கணம் என்றால் உன்னை மறந்து பிறரிடம் கொள்ளும் பற்றின் விளைவாகும்.

    “அன்பிற்கு இலக்கணம் தாய்
     பண்பிற்கு இலக்கணம் தந்தை
     தியாகத்தின் இலக்கணம் பெற்றொர்
     உயிரின் இலக்கணம் மெய்நட்பு
     உழைப்பிற்கு இலக்கணம் எரும்பு
     முயற்சிக்கு இலக்கணம் சிலந்தி
     சுருசுருப்பின் இலக்கணம் தேனீ
     இவற்றிற்கெல்லாம் இலக்கணம் படைத்தவன்”.


           அன்பு பற்றி தெரிய வேண்டுமா, முதலில் உன்னை அன்புசெய், அதனைதாயிடமிருந்து, பெற்றுக்கொள் பொக்கிஷமான அன்பை, வென்றுவிடு இவ்வுலக வாழ்வை. அன்பிற்கு இலக்கணமாக அடிக்கடிச் சொல்வது அன்பே கடவுள், அதேபோல மற்றொன்றும் சொல்வது வழக்கம், அதுதான் அன்பில் சிறந்தது தாயன்பு. இப்படிப்பட்ட அன்பை நான் 4 வகையாக பிரிக்கிறேன். அவை,

உள்ளன்பு
தேகன்பு
பிறரன்பு
இயற்கைஅன்பு
 
உள்ளன்பு:

     இவ்வகை அன்பை சொல்ல வேண்டுமென்றால் இரு நபரை குறிக்கும். அவர்கள்,

தாய்
உன்மையான நண்பன்


     ஒரு தாய் தன் குழந்தை எவ்வளவு தவறுசெய்தாலும், எந்ததோற்றத்தில் இருந்தாலும் அப்படியே ஏற்றுக்கொள்வதுதான் தாய். இதையே இறையன்பு எனலாம். ஏனென்றால் இறைவன் நாம் எந்த நிலையில் இருக்கிறோமா அவ்வாறே ஏற்று அன்புசெய்கிறார். எனவே அன்பு என்றால் இரண்டு இலக்கணம்,


ஒருதாயின் காணப்படும் அன்பு,

     மகனே!,
           நான் உன்னை பெற்றபோது வழியில்லை
           ஏனென்றால் என் உயிரே நீதான்
           மழலை பருவத்தில் இதயத்தை மிதித்தாய் 
           சுகத்தின் தன்மையை உணர்ந்தேன்
           உன் தவறால் பிறருடைய வன்சொற்கள்
           என்னைக் காயப்படுத்தியது – ஏன்?
           அது உன் தவறல்ல என் தவறு
                ஆனால்
           இளமையின் துடிப்பால் மறந்தாய்
           எங்களை விழுந்தாய் சேற்றிலே
           உன்னை காப்பாற்ற விரைந்தேன் - ஆனால்
           என்னை விழசெய்து நீ சென்றாய்
           இருப்பினும் உன்னை அன்பு செய்வேன் - ஏனென்றால்
           நீஎன் செல்வம்,கொடை
           என்னை சேர்த்தாய் மடத்தில் - ஆனால்  
           உன் நினைவு என்னில்
           இவ்வுலகை இழந்தாலும் 
மறுஉலகு வரை அன்பு செய்வேன் உன்னை – ஏனென்றால்
           நான் உனக்குள் குருதியாய் இருக்கிறேன்
           மறவாதே உன்னை நேசிப்பவரை…!!!


     இதுதான் தாயன்பு ஆகும். நான் சொல்வது வாழ்வை தனக்காக வாழும் தாயல்ல மாறாக தன்மழலைக்காக வாழும் தாய்க்கே பொருந்தும்.
     என்னை பொறுத்தவரை தாயன்புஃஇறையன்புக்கு அடுத்து நட்பு அதாவது உண்மையான நண்பனின் நட்பு.

           “துன்பத்தில் கலந்து இன்பத்தில் மகிழ்ந்து
           அன்பில் இணைந்து உயிரில் உறைவதே
                உண்மையான நட்பு”


            இதே தான் தாயும் செய்கிறாள், ஆனால் ஒரெயொரு வித்தியாசம் அதுதான் பகிர்வு. எந்தவொரு செய்தியும், அது இரகசியமாகவே இருப்பினும் சொல்லும் ஒரே உறவு அல்லது பந்தம் என்றால் அதுதான் நட்பு. அதனால் தான் பல சிந்தனையாளர்கள் பெற்றோர்களை நண்பர்களாக எண்ணிப் பழகு உன்னால் தீங்கு செய்ய இயலாது என்பர். உயிரில் கலந்த உண்மையான நட்பிற்கு ஊறு விளைவிக்கும் எண்ணம் ஒருபோதும் வராது. அப்படியும் வந்தால் அவன்ஃஅவள் உலகில் தோன்றியதற்கு பலன் இல்லை, இவர்களின் பிறப்பே வீண் என்றுதான் சொல்ல வேண்டும். எனவே எவரிடமும் அன்போடு பழக வேண்டும் என்றாலும் அவர்களை முதலில் நீ நண்பனாக பார்பின்பு உன்னை அறியாமலே வைப்பாய் அன்பை.

     எனவே இன்றைய காலத்தை அடிப்படையாக கொண்டு பார்த்தோம் என்றால், ஒருவர் கூறுவதாக வைத்துக் கொள்வோம்,

     தோழா!
           “தன் இனம் அழிந்தால் கூடும் காகம்
           காட்டினுள் நுழைந்தால சூளும் விலங்குகள்
           இவையெல்லாம் பெற்றிருப்பது ஐந்தறிவு–ஆனால்
           ஆறறிவு பெற்ற நீ என்னை செய்கிறாய்,
           வேட்டையாடுவது உன் இனத்தை
           ஏழையாக்குவது உன் இனத்தை
           நன்றிமறப்பது உன் இனத்தில்
           ஏன்? - மாற்றம் வேண்டாமா? 
           அன்பு என்னும் மருந்தை எடு
           வாழ்வு உனக்கு வாழ்வு.”

    
     எனவே இவ்வுலகில் மனிதனின் வாழ்வில் தாயன்பு மற்றும் மெய்நட்பு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை புரிந்துக்கொள்.

தேகன்பு:
     இதைப்பற்றி விளக்கத் தேவையில்லை என நினைக்கிறேன். சரி இருப்பினும் சிலவிளக்கம் எனக்கு தெரிந்தது, புரிந்தது. தலைப்பிலே இருக்கிறது இதனுடைய விளக்கம், தேகன்புஸ்ரீதேகம்ூஅன்பு. தேகம் - உடல். இவ்வகை அன்புதான் 14 முதல் 24 வயதுக்கு முன்பாக வருவது என நான் நினைக்கிறேன். அதாவது ஒரு ஆணோ அல்லது பெண்ணோ அழகைப் பார்த்து வியந்து காதல் என்னும் வலையில் விழுவார்கள். அவர்களிடம் கேட்டால் சொல்வார்கள், அவள்(ன்) என் உயிர், இந்தவார்த்தை உடலின் மீது ஏற்படும் அன்பால் வருகிறது. எனவே இதற்குமேல் சொல்ல விரும்பவில்லை. ஆனால இவ்வகை அன்பை தவிர்ப்பது (இல்லை) நீக்குவது நன்று.

     எனவே மனித வாழ்க்கையில் அன்பின் முக்கியத்துவத்தை தெரிந்தளவில் எழுதியுள்ளேன். அகற்ற வேண்டிய அன்பையும் கூறியுள்ளேன். அடுத்து முக்கியமானது, “பகிர்ந்துக்கொள்ளுதல்”.
          
 
பகிர்ந்துக்கொள்ளுதல்:

     பகிர்ந்துக்கொள்ளுதல் என்ற தலைப்பை பார்த்தவுடன் தேவையில்லாமல் எழுதுக்கொண்டிருக்கிறேன் என எண்ண வேண்டாம். பகிர்ந்துக் கொள்ளுதல் என்பது பொருள்களை மட்டும் பகிர்வது அல்ல,மாறாக மனதை பகிர்ந்துக்கொள்ளுதல்.
    
ஒருவனின் ஏக்க நிலை அடங்கிய வரிகள்,

இறைவா,
           உலகை காணும் வரை
           கண்டேன் கனவுகள் பல – ஆனால்
           கண்டதும் வருந்தினேன்
           விலங்காய் தோன்ற வில்லையே
           ஏன்? ஏன்? தெரியுமா!
           அவற்றில் ஒற்றுமை வேர் உள்ளது - ஆனால்
           மனிதனிடம் பிரிவினைவேர் உள்ளது
           பறவையிடம் கண்டேன் ஒற்றுமையின் அழகை
           ஏழையிடம் கண்டேன் பகிர்வின் பண்பை
           பழைமைமறந்தவனிடம் கண்டேன் சுயநலத்தை
           இவர்களிடம் சொல்லக்கூட குறைகள் இருக்கிறது பல
           ஆனால் நேரமில்லைகேட்பதற்கு இவர்களுக்கு
           இப்பொழுது புலம்புகிறேன் சுவரிடம்
           சொல்கிறார்கள் பைத்தியக்காரன் என்று…!!!


     ஆம் மனதை குப்பையால் நிரப்பினால் நல்லதை இட இடமில்லை. அழுகிய குப்பையை எடுத்து மனதை சுத்தப்படுத்த தேவைபடுவது அன்பான, ஆறுதலான, உண்மையான வார்த்தை மற்றும் நம்பகத்தன்மை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

     இன்றைய காலத்தில் தற்கொலை, மனநோய், இரத்தஅழுத்தம் அதிகமாக காரணம் கருத்து பரிமாற்றம் இல்லாததுதான். என்று ஒருவனுடைய மனதில் சோர்வு இல்லையோ அன்றே அவன் வாழ்க்கையை ரசிக்க தொடங்குகிறான்.

     தாய்மையிலும் நட்பு என்ற தலைப்பில் எழுதப்படுகின்ற இக்கட்டுரைக்கு இவைகள் தேவையா என எண்ணலாம். மேலோட்டமாக பார்த்தால் தேவையற்றது, உள்ளாந்த கருத்துடன் (எனவேதான் நட்பை உள்ளே கொண்டு வந்தேன்) பார்க்கும்போது இதுதான் வாழ்க்கையில் முக்கியமானது என்பதை அறியமுடியும். நட்பைப் பற்றி சொன்னதற்கு காரணம், இவற்றையெல்லாம் கொண்டது நட்பு ஆகும். எனவே தாயிடம் பகிர்வது அதிகம் அதைவிட நண்பனிடம் பகிர்வது அதிகம் ஆகும். எனவே தாய்மையும், நட்பையும் இணைத்து சித்தரித்துள்ளேன். எல்லாவற்றையும் நாம் தாயிடமிருந்துதான் கற்கிறோம். நட்பு அதுவும் ஒருதாய்தான் கற்றுக்கொடுக்கிறாள். எனவே தாயும், சேயும் நண்பர்களாக வாழும்போது அன்பிற்கும், பகிர்விற்கும் பஞ்சமிருக்காது என்பதை தெளிவுப்படவும், உறுதியாகவும் கூறுகிறேன். எனவே நட்பை வளர்த்தால் தாயும் சேயும் ஒன்றாகும்.
 
நட்பிலும் தாய்மை பார்
                                           தாய்மையிலும் நட்பைப் பார்
                                                                                                   ஒன்று என்பதை உணர்ந்துக்கொள்.
 
                                                                                                                                                   ம.மரியசுவின்