வேற்றுமையில் கலந்த சமுதாயம்

சுவின்
ஜனவரி 14, 2018 02:09 பிப
                                                     வேற்றுமையில் கலந்த சமுதாயம்
 
                                                   “உழைப்பவன் ஒதுக்கப்படுகிறான்
                                                       நடிப்பவன் மதிக்கப்படுகிறான்”
இன்றைய உலகமானது உழைப்புக்குக் கொடுக்கும் மதிப்பைவிட நடிப்புக்குதான் அதிக மதிப்புக் கொடுக்கிறது. நடிப்பு என்றால் சினிமா அல்ல, மாறாக வாழ்க்கையையே நடிப்பது. ஆம், இன்று எத்தணையோ வகையினர்களாக மானுடம் பிரிக்கப்பட்டு சீரழிந்து கிடைக்கிறது. இவற்றிற்கெல்லாம் காரணம் பணத்தையும், மதிப்பையும், அங்கீகாரத்தையும், அதிகாரத்தையும் பெற பலவிதமான கதாபாத்திரங்களாக இன்று மானிடர்களாகிய நாம் இப்பாரினில் வலம் வருகிறோம். ஏத்தகைய கதாபாத்திரங்கள் நம்மை அடிமையாக கொண்டுள்ளன என்பதை கீழே காண்போம்.
அறியாமை – தலைவனாக
எளிமை – கோடீஸ்வரனாக
தாழ்ச்சி – அடக்கி ஆள்பவனாக
ஏழ்மை – சுரண்டுபவனாக
விட்டுக்கொடுத்தல் - எட்டிப்பிடிப்பவனாக
இன்னும் பலவிதமான முகமூடிகளை அணிந்து கொண்டு பிறர் மீது அக்கறையற்ற ஒரு வாழ்வை வாழ்கிறோம். ஆனால் இத்தகைய பண்புகளை உடைய அனைவரும் இப்படிப்பட்ட வாழ்வு வாழ்வார்களா என்றால் இல்லை. ஆனால் நிச்சயமாக 20 முதல் 25 விழுக்காட்டினர் இத்தகைய வாழ்வுதான் வாழ்கின்றனர். நீங்கள் கேட்கலாம், எவ்வாறு இத்தகைய நபர்கள் சமுதாய சீரழிவுகளுக்கு காரணமாவர்கள்? ஏன்று.
உங்களது வினா சிந்திக்க வைக்கக்கூடியது. ஆனால் இந்த 25 விழுக்காட்டில் குறைந்தது 15 விழுக்காட்டினர் பிறரது வாழ்வை சீரழித்தே வாழ்கின்றனர். குறிப்பாக இன்றைய சூழலில் தலித் மற்றும் அகதிகள்  மிகவும் புறந்தள்ளப்பட்ட, ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ளனர். மேலும் இன்னுடம் நம் நாட்டில் ஏழைகளின் விழுக்காட்டில் மாறா நிலை நிலவுகிறது. இதற்கெல்லாம் காரணம் முகமூடிகளை அணிந்து இப்பாரினில் உலாவரும் கொள்ளக்காரர்கள்தான்.
இன்றைய சமூகத்தில் செல்வர்கள், முதலாளிகள் மற்றும் சாதி வெறியர்கள் மனித மாண்பை மதியாமல் பல மக்களை அடக்கி ஆளுவதும், புறக்கணிப்பதுமாக உள்ளனர். குறிப்பாக நம் நாட்டில் தமிழர்கள் என்றால் தெருவில் நடமாடும் நாயை விட கேவலமாக எண்ணப்படுகின்றோம். தமிழர்களுக்கான சுதந்திர உரிமை முற்றிலும் பறிக்கப்பட்டுள்ளது. கூடங்குளம் பிரச்சினை, இலங்கை தமிழர் பிரச்சினை மற்றும் பல பிரச்சினைகள கண்டுக்கொள்ளப்படாத நிலையிலேயே காணப்படுகின்றன. மேலும் தமிழக அளவில் பார்க்கும்போது சாதி மற்றும் உயர்ந்தவன் தாழ்நதவன் போன்ற பல்வேறு பிரச்சினையால் மனித மாண்பானது சிதைந்த நிலையில் காணப்படுகின்றது.
என்னுடைய பார்வையில் மனித மாண்பு என குறிப்பிடுவது சிலவற்றையே, அவைகள்,
மனிதனை மனிதனாக மதித்தல்.
உணர்வை புரிந்துக் கொள்ளுதல்.
உண்மையில் நிலைத்து நிற்றல்.
விட்டுக்கொடுத்து வாழ்தல்.
இன்னும் பல உள்ளன. இவைகள் அனைத்தும் ஒரெயொரு நபரால் மட்டுமே இப்பாரினில் நிவர்த்தி செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்தான் தாய் என்ற மாபெரும் கொடை. ஆனால் மிகவும் வருந்தத்தக்க செய்தி என்னவென்றால், மிகவும் சிறந்த எடுத்துக்காட்டாக காண்பிக்கப்பட்ட தாய்மைஃ தாய் என்ற பந்தம் கூட இன்று தலைகீழாக காணப்படும் நிலை. இதுவும் முழுமையல்ல, ஆனால் குறைந்தது 30 விழுக்காடாவது இருப்பது உறுதி. இவற்றை நாம் அன்றாட செய்திகளிலும், செய்தித்தாள்களிலும் மற்றும் இணையத்தளத்திலும் காணப்படுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.
ஓட்டுமொத்தமாக கூற வேண்டுமென்றால் மனித மாண்பு அழிக்கப்பட்டு இனவெறி, சாதிவெறி, பாகுபாடு வெறி மற்றும் பலவேறு ஏற்றத்தாழ்வுகள் இன்றைய மானுட சமுதாயத்தை கலங்கடிக்கின்றன.
இவற்றிலிருந்து மீளுமா? அல்லது மீளாத்துயரில் அகப்பட்டு அழிவை நோக்கி பயணிக்குமா? இம்மானுட சமுதாயம், சிந்திப்போம்!

முயல்வோம் ஒன்றுப்பட்டு                                                வெல்வோம் வேற்றுமையை 
                                    பயணிப்போம் சமுதாய மாண்போடு
 
                                                                                                                                          ம.மரிய சுவின்.