கருவாச்சி....

செநா
ஜனவரி 14, 2018 09:30 முப

கருவிழி போல் காவிய வண்ணம் 
கொண்ட தமிழ் மாண்பு பெண்ணே! 
கடைவிழி கொண்டு குருதியில்லாமல் 
இதய சுகவலி தரும் அழகு மானே! 
இமைபொழுதும் உனை மறவாமல் 
நான் இருக்கிறேன்-ஆனால் நீயோ
இமை கொண்டு மைவிழியில் என்னை 
மட்டும் சிறைவைப்பது ஏனோ!!!