மீண்டு(ம்) வந்தாய்... வாழி!!!

பூங்கோதை செல்வன்
ஜனவரி 13, 2018 11:53 முப
எல்லாம் கலைந்து  போனது நீ இல்லாமல், 
எல்லாம் சிதறிப்போனது நீ இல்லாமல்,
நீயே எல்லாம் ஆனாய் ... நினைவுகளை மட்டும் விட்டு விட்டு மறைந்ததெப்படி ... 
சேர்ந்திருந்த உள்ளங்கள் உன் மறைவால் 
திசைகள் மாறிப்போனதே .. நீ அறிவாயா? 

மீண்டு வந்தாய் 
மீண்டும் வந்தாய் -எம் 
மீது கொண்ட பாசமோ 
மீந்திருந்த உணர்வோ... 
வந்தாய் மீண்டும்... வாழ்த்துகிறேன் 
நீ நீடு வாழ்வாய் ...