உன்தன் மீது காதல்......

செநா
ஜனவரி 13, 2018 08:02 முப
தேகம் கண்டு வரவில்லை
உன்தன் மீது காதல்,  
நேசம் மட்டுமே 
என்தன் ஒற்றை ஆவல்,, 

கற்பணையும் சிலகணம் தோன்றுதடி; 
அத்தனையும் மறுகணம் விழிக்கொண்டு சாய்க்கின்றாயடி,,, 

உந்தன் விழியின் ஒரம் கண்ணீர் துளி காணும் வகையில்; 
எந்தன் பாதை என்றும் மாறாதடி,,, 

தலை மடியில் சாயும் நேரம்; 
தோள்கள் உன்னை சுமக்கும் போதும்; 
இருவரும் குழந்தை ஆனோமடி,,, 

உன்விரல் பிடித்திடும் வரம் கிடைக்க, 
எத்தவம் செய்தேனடி..........