ஒரு போதும் மறவாதே...

செநா
ஜனவரி 12, 2018 02:24 பிப
ஓருபோதும் மறவாதே, 
இரவிலும் நினைக்காதே, 
உன்னோடு நான் வாழதானே 
தினமும் கண் விழிகின்றேன். 

கனவிலும் உறவாடுவேன், 
கவிஞன் நான் இல்லையே! 
கவிமழை பொழிவது ஏனோ, 
கார்மேகம் நீ ஆனாயோ! 

மெல்ல ஒர் சத்தம் கேட்டாலும், 
கண் இமையா நொடியினிலே, 
என்மனம் உன்னை தேடுதே, 

அடிபோடி!!! 
நான் உன்னை நோக்க, 
இமை இரண்டும் சதி செய்யுதே, 
இருந்தாலும் சுகம் கூடுதே...........