ஒரு கிராமத்தில்...

கவிஞா் முகமது
ஜனவரி 22, 2017 11:25 பிப
"ஒரு கிராமத்தில்.....
 
"அரும்பாடுபட்டு பண்பாடுகளை
காப்பாற்றி போற்றி...
காற்றும் அடைக்கலம் பெற்று
பறவைகள் பல்லாங்குழி ஆடி
மரங்கள் நிம்மதியாய் முச்சுவிடுவது
அழகான என் கிராமத்தில்...
 
வார்த்தையில் வர்த்தகம்
கோவிலில் உற்சவம்
வேதங்கள் உயிராக
உயிர்கள் உறவாக
மானம் தன்மானம் காத்து
மரியாதைகள் மரியாதையாக
வாழ்கிறது என் கிராமத்தில்...
 
வீரத்தின் குருதியாய்
உள்ளத்தில் உறுதியாய் 
உவனிப்போடு உள்ளவர்கள்
குலதெய்வங்களை வாழவைத்து
தானும் வாழ்வாதாரம்
 கேட்பவர்கள் என் கிராமத்தில்...
 
சுவனத்தின் முகவரியான
என் கிராமத்தில் நரகத்தின்
அடிக்கலும் நாட்டப்படுகிறது
காதலுக்காக... ஆம்
பெற்றோருக்காக
உறவுமுறை திருமணத்தால்
சாதி மதக் காரணத்தால்
பல காதல்  தோல்வி கண்டும் மகிழ்ச்சியாய் 
மேடையேறுகிறது  என் கிராமத்தில்..
 
எண்ணற்ற பல நல்லுள்ளங்களின் 
காதல் இணையாமல் பயந்து
பணிந்து அது
கள்ளக்காதலாக 
மாறியது என் கிராமத்தில்
 
ஊக்குவிக்க யாருமின்றி
உதாசினத்தால் எவ்வளவோ அதிகாரிகள், மகாத்மாக்கள்,
விஞ்ஞானிகள்,
விளையாட்டு வீரர்களை
தூங்கவைத்திருக்கிறது என் கிராமம்.
அறியாமையை இன்னும்
அறியாமலே என் கிராமம்..
இருந்தும் பெருமையாய் பாடுகிறேன்
பெருமை படுகிறேன்
நான் பிறந்ததும் வாழ்வதும்
கிராமம் என்பதால்..!
 
                     -முகமது"ஷா-ர-தீ"
                            பெங்களூர்