அக்கா

கவிஞா் முகமது
ஜனவரி 22, 2017 11:23 பிப
"என்னை குளிப்பாட்டி
செல்லமாய் சோறூட்டி
அழகாய் ஆடையணிவித்து
அழுக்காய் வலம் வருவாள்
என் தூக்கத்திலும்
என் துக்கத்திலும்
என் ஊக்கத்திலும்
கலந்திருப்பால்...
தாயிருந்தும் தாலாட்டு பாடி
தாரமாகி போனபின்பும் என்
நினைவை தாங்கி வாழும்
உன்னத உறவே- அக்கா
தோழிக்கு அகராதி
விட்டுக்கொடுக்கும் குணவதி
அக்கொடுப்பிணை எனக்கில்லை
அதே என்விதி
அடுத்த பிறவியில்
இப்பாக்கியத்தை நானும்
பெற வேண்டுகிறேன்..
-முகமது"ஷா-ர-தீ"
பெங்களூர்