தெய்வம் இருப்பது எங்கே...

கவிஞா் முகமது
ஜனவரி 22, 2017 11:19 பிப
"தெய்வம் இருப்பது எங்கே..
~~~~~~~~~~~~~~~~~~~~
 
"கோவிலில் சிலையாக
கோபுரத்தில் மணியாக
புத்தகத்தில் எழுத்தாக
சிலருக்கு உருவமாக
சிலருக்கு வேதமாக
சிலருக்கு இல்லாமலுமாக
          தெய்வம் இருக்கிறது...
ஆடையில் வடிவமாய்
தோளில்  சித்திரமாய்
ஆணியின் கூராக
தெருவில் தேராக
குடிகாரனின் பையிலும்
பிச்சைக்காரன் கையிலும்
மதுக்கடை வாசலில்
மதுவாடை கோப்பையில்
நோயாளியின் இதயத்தில்
மருத்தவனின் புத்தியில்
பயணத்தின் படியில்
ஓட்டுநரின் கைப்பிடியில்
இப்பூமியின் ஒவ்வொரு அடியிலும்
விவசாயிகளின் மடியிலும்
அவ்வளவு ஏன்...
விபச்சாரி வீட்டில் கூட
ஒரு காவல் தெய்வம்..
தெய்வம் எங்கு 
வேண்டுமானாலும் இருக்கும்,
தெய்வீகம் இருக்கும்
இடத்தில் நெல்மணியாய்
ஜொலிக்கும்...
தெய்வம் இன்னும் 
தேயாமல் இருப்பது
ஓயாமல் உழைக்கும்
விவசாயி உள்ளத்திலும்
 நிலத்திலும் தான் ...!
 
                -முகமது"ஷா-ர-தீ"
                         பெங்களூர்
"உண்மை பலருக்கும் வலிக்கும்"