விரல் கோர்க்க வா...

கவிஞா் முகமது
ஜனவரி 22, 2017 11:15 பிப
 
 
"பட்டாம்பூச்சியாய் 
                       படப்படந்தோம்..
மின்மினியாய் சுற்றி வந்தோம்
கால்கடுக்க நடந்து
காதல் கதை பேசி
முத்தம் பறிமாறி
என்னை நீ புரிந்து
உன்னை நான் புரிந்து
பூரணமாய் காதலராய் 
வாழ்ந்துவிட்டோமே..
வா.. நாமும் வாழ்க்கை
தோட்டத்தில் பூச்செடியாவோம்
வான் விட்டத்தில்
தாரகையாவோம்..
வாழ்த்த பல உறவுகள் உண்டு
மாலைகள் சூடி
மனமார விரல் கோர்க்க வா..
வலமாய் வாழ வரம் கோர வா..
உரிமையாய் மீண்டும் ஓர்
 முத்தம் தர வா...
 
                       -முகமது"ஷா-ர-தீ"