ஜல்லிகட்டு

கார்முகில்
ஜனவரி 20, 2017 10:47 பிப
முகநூலின் முகவரியில் முழுமையான முகவுரையில் முன்னின்ற அனைவரையும் முழுமனதாய் இணைய வைத்தது ஜல்லி கட்டு கட்டாத காளையரையும் கள்ளமில்லா கன்னியரையும் கரையோரம் தோழா்களாய் கதைக்க வைத்த ஜல்லி கட்டு கலாம் ஐயா கனவுகளை கனிய வைத்த ஜல்லி கட்டு இளையதலைமுறையின் இணையில்லா அறப்போரை இணையம் வழியே இசைக்கவைத்த ஜல்லி கட்டு தரணி எல்லாம் தமிழா்களை தலைவணங்க வைத்த ஜல்லி கட்டு நடிகனையும் நாட்டையாளும் நல்லோரையும் நாணவைத்த ஜல்லி கட்டு தொலைத்தொடா்பின் சேவையிலே தேவைகளை தெளிவாக்கிய ஜல்லி கட்டு உதவுகின்ற உள்ளங்களை உலகிற்கு உணர வைத்த ஜல்லி கட்டு தன்மான தமிழனை தாய்நாட்டுக்கு அடையாளம் காட்டிய ஜல்லி கட்டு தலைமையில்லா போர்வாள்களை தனித்துவமாய் ஜொலிக்க வைத்த ஜல்லி கட்டு அடுத்த தலைமுறையின் அழகான பண்பை ரசிக்க வைத்த ஜல்லி கட்டு செல்லுகின்ற காசைகூட செல்லா காசாக்கிய தலைவனுக்கு சொல்லுவோம் பீட்டாவை கடத்து ஜல்லி கட்டை நடத்து