ஈழத் தமிழரும் தமிழக எழுச்சிக்கு ஆதரவு

கா.உயிரழகன்
ஜனவரி 19, 2017 06:22 முப
"இன்றைய ஒன்றுகூடலின் ஊடக அறிக்கை." என முகநூல் நண்பர் 'கிரிசாந்' தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டிருந்தார். அதனைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

உலகெங்கும் தமிழரின் அடையாளங்களை அழிவடைய இடமளித்ததால் தான், அரை உலகையே ஆண்ட (ஆபிரிக்கக் கீழ் எல்லை தொட்டு அவுஸ்ரேலியக் கீழ் எல்லை வரையான இந்து சமுத்திரம் உள்ளடங்கலான குமரிக்கண்டம்-lemuria continent) தமிழருக்கு உருப்படியான தமிழ்நாடு இல்லாமல் போனது.
 
தமிழகத் தமிழரை ஈழத்துக்கு போவென
சுப்பிரமணிய சாமிக்கள், கிந்தீக்கள் விரட்டுவதும்
ஈழத் தமிழரைத் தமிழகத்துக்கு ஓடென
அப்புகாமிக்கள், களுபண்டாக்கள் விரட்டுவதும்
எத்தனை நாளைக்கு...?
தமிழரின் தொன்மை, தமிழரின் பண்பாடு,
குமரிக்கண்டம் (lemuria continent) வரலாறு எல்லாம்
உலகத்துக்கு உறைக்க உணர்த்தினால் தான்
ஈழத் தமிழரும் தமிழகத் தமிழரும்
இணைந்து இயக்கும் எழுச்சியாலே
உலகெங்கும் வாழும் தமிழர்
ஒன்றிணைந்து குரல் கொடுப்பதனாலேயே
தமிழரின் அடையாளத்தை உறுதிப்படுத்தலாம்...
வலுவான உறுதிப்படுத்தல் தான்
தமிழர் தலை நிமிர்ந்து வாழ வழி விடுமே!
 
 
இனியாவது உலகெங்கும் வாழும் தமிழர் ஒருங்கிணைந்த குரலெழுப்புதலால் தான் தமிழரின் அடையாளத்தை நிலைநாட்ட முடியுமென உணருவோம்.

மேலதீகப் படங்கள் முகநூல் தகவலுக்கு எனது வலைப்பூவைப் பாருங்கள்.
http://www.ypvnpubs.com/2017/01/blog-post_94.html