நட்சத்திரங்கள்

umadevi
ஜனவரி 15, 2017 10:41 பிப
வெள்ளை நிறத்தில் பூக்கும் 
பூக்கள் போல 
வெள்ளை முத்துக்கள் கடலில் 
தோன்றுவது போல, 
இரவில் நீ தோன்றுகிறாய்.. 

நீ வெள்ளையாய் இருப்பதால் 
வெள்ளையை வெறுக்கிறாயா..?? 
இல்லை, 
கருப்பை பிடிக்கும் என்பதால் 
அந்நேரத்தில் தோன்றுகிறாயா..?? 

இங்கிருந்து பார்த்தால் 
கருப்பு முகத்தில் இட்ட 
வெள்ளை பொட்டைப் போன்று 
தோன்றுகிறாய் 

நீ அவ்வாறு தோன்றியது 
மற்றவர்களை கவரவா?? 
இல்லை, 
உனக்கு கருப்பு பிடிக்கும் 
என்பதற்காகவா?