தேசிய இளைஞர் தின வாழ்த்துக்கள்

தமிழ் நண்பர்கள்
ஜனவரி 12, 2017 10:02 முப
அன்பான தோழமைகளுக்கு தேசிய இளைஞர் தின வாழ்த்துக்கள்...


 மாற்றங்கள் தொடரட்டும்
நெஞ்சின் ஈரம் மாற வேண்டாம்

நாடும் மொழியும் வேறுபட்டும்
சாதி கலவரங்கள் தொடரவேண்டாம்

எங்கு பிறந்திடினும் நரம்பினில் ஓடும்
செங்குருதி நிறமொன்றே ...

உயர்ந்தவனோ தாழ்ந்தவனோ 
தாய்ப்பால் நிறமொன்றே
மறத்தல் வேண்டாம்...

வேண்டாம் இனியும் நம்மில் வேறுபாடு

ஆதி காலத்தில் உறவினர்களாய் 
மூதாதையர் சொந்தங்களாய்...
ஆனால் இன்று???

யார் விதைத்தது நம் நெஞ்சில்
சாதி என்னும் நச்சு விதையை?

இளைஞர்களே வளரட்டும் மேன்மேலும் மனித நேயம் !

பிரித்தாளும் கொள்கையுடன் நம்மில் பகை வளர்த்து குளிர் காய
காத்திருக்கின்றன மனித மிருகங்கள்
வீழ்ந்திட வேண்டாம்..

மார்தட்டி உரக்கச் சொல்லுவோம்
நாம் தோழமைகள்!

பிரிவினைகள் பிரித்தாள அனுமதியோம்

ஏற்றிடுவோம் நம்மில் சபதம்...!
உடல் மண்ணில் வீழும்வரை
தொடர்ந்திடுவோம் மனிதநேயம்...