ஆனாலும் என்ன??? வேற்றுமையில் ஒற்றுமை!!!

முகில் நிலா
ஜனவரி 11, 2017 04:44 பிப

உயிர்விடும்
உழவன்
நியாயவிலைக்
கடையில்
இலவசக் கரும்பு
விநியோகம்!

ஜல்லிக் கட்டுக்குத் தடை
பொங்கல்  விடுமுறை  
தமிழனுக்கு மட்டும்!!

ஹோலிப் பண்டிகை
தீபாவளி இந்தியர்கள்
அனைவருக்கும்!!!

தண்ணீர் தரமாட்டோம்
மின்சாரம் கொடுத்தாக வேண்டும்!!!!

அரியணை 
யாருக்கென்ற
அலோசனையில்
மந்திரிகள்!

உள்தாழ் ஒட்டவும்
வங்கியில் நிற்கவும்
ஆதார் நகலெடுக்கவும்
அனுதினம் வரிசையில் மக்கள்!!

திரை அரங்குகளில்
தேசிய கீதம் பாடி
தேசப்பற்று வளர்க்கப்படுகிறது!!!

அப்பல்லோ முதல்
அரசு மருத்துவமனை வரை
பாதுகாக்கப்படுகிறது
நோயாளிகளின் உயிர் ரகசியம்!!!!

ஆனாலும் என்ன
வேற்றுமையில் ஒற்றுமை
பாடம் படிக்கிறாள் அம்மு!