எனது ஞாயிறுகள்

முகில் நிலா
ஜனவரி 09, 2017 04:01 பிப

நல்லதாக சமைக்க
அடிக்கடி
தேநீர் தயாரிக்க

உண்ட, குடித்த
பாத்திரம் துல‌க்க
அவரவர் விருப்பம் கேட்டு
சிற்றுண்டி தயாரிக்க

எப்போதாவது
எட்டிப் பார்த்து
தொலைக்காட்சியில் மழலைக்குரல்கள் ரசிக்க
இப்படியும்

அல்லது
சிறகு முளைத்த இரு பிள்ளைகளையும்
கடுகடுக்கும் மாமாவையும்
கட்டுப் படித்தியபடியே
பயணம் மேற்கொள்ள

அல்லது
இலக்கிய கூட்டத்தில்
கடைசி இருக்கையில்
ஜன்னல் ஓரமாய்

கவிதைகளில்
தொலைந்தும்
கடத்திக் கொண்டிருக்கலாம்!

-எனது ஞாயிறுகளை