வா.....தோழி

pandima
ஜனவரி 04, 2017 10:18 பிப

அன்புத் தோழியே
எங்கிருக்கிறாயடி ? 
அடுக்கலையில் வேலையிலும்
அலுக்காமல் உன் நினப்பு
வந்து என்னை வாட்டுதடி

நீ வரும் நேரம் சொல்லடி
வாசலில் காத்திருப்பேனடி
உன்ன காணாம தேடி 
பதைபதைக்குதடி மனசு
நோவுகொண்டு வாடினாயோ

வேலை பலுவில் சோர்ந்தாயோ
நெஞ்சுப்பாரம் அழுத்தியதோ
சொல்லவியலாத் துயரமோ
விழியில் கோர்க்கும் கண்ணீரோ

ஓடி வந்துவிடடி காத்திருக்கேன்
கோப்பையில் தேநீர் நிரப்பி
வந்து சாய்ந்துகொள்ளடி
இந்த தாயின் மடி உனக்கே