கடைசியாக ஒன்று கூறுகிறேன்.......

செ. சக்கரவர்த்தி
ஜனவரி 04, 2017 02:36 பிப
உழவின்றி உலகில்லை...
உண்மைதான்,
உழுபவனுக்கு மகிழ்வில்லை,
காவிரி வர மறுக்கிறாள்
கர்நாடகா கைது செய்யப்பட்டதால்,
வான்மேகம் மழை பொழிய மறுக்கிறது
ஊழலும், லஞ்சமும்
தலை விரித்து ஆடுவதால்
போதா குறைக்கு
அரசே குடியுரிமை மட்டுமல்ல
குடிக்கிற உரிமையையும் வழங்குகிறது.
குடிக்கிற தண்ணீருக்கு பஞ்சமில்லாதபோது
நாம் ஏன் குடிதண்ணீர் வழங்க வேண்டுமென
வான்மேகம் ஒழிந்துகொல்கிறது
பயிர் நிலங்களெல்லாம்
பாலைவனங்கலாகிக் கொண்டிருக்கிறது.
விவசாயிகளின் உயிர்களெல்லாம்
ஊசலாடிக் கொண்டு இருக்கிறது
மேலும் விவசாய நிலங்கள் எல்லாம்
விலை நிலங்கள் ஆக்கப்படுகிறது.....

அதுமட்டுமா? இதையெல்லாம் தாண்டி
விளைச்சல் விளைந்துவிட்டால், அதற்கும்
அரசே விலை நிர்ணயிக்குமாம்...
இன்னும் எவ்வளவோ இருக்கிறது
இதை கூறுவதற்கே
எனக்கு நாக்கு வலிக்கிறது.
கூறும் நானே இப்படியென்றால்
இதையெல்லாம் அனுபவிக்கும்
உழவருக்கு எப்படி இருக்கும்????

கடைசியாக ஒன்று கூறுகிறேன்
இந்த பூமி விவசாய பூமிதான். ஆனால்,
விவசாயிகளின் பூமி அல்ல.
அதற்கு யார் காரணம் என்று
நான் கூறித்தான் தெரிய வேண்டுமா?

பயிர்கள் மட்டும் வாடவில்லை
அதை வளர்த்தவர்களும் தான்...