விவசாயி வாழ்வும் இனி மலராதோ

செ. சக்கரவர்த்தி
ஜனவரி 04, 2017 01:57 பிப
யானைகட்டி போரடித்த தமிழ்நாடு
இன்று புல் முளைக்க
வழியில்லா வெறும்காடு

சாராயம் விற்பவருக்கு
தினந்தோறும் பாதுகாப்பு
விவசாயம் சாயம் போச்சே
அதைக்காக்க யாரும் இல்லை

தாய்பாலின் அவசியம் சொல்லும்
அரசு அதுவேதான் மதுவும் விற்கும்
நால்லாட்சி நடந்தால்தானே வான்மழையும்
மறுக்காது பொழியுமென்றார் வள்ளுவர்
தினந்தோறும் காவோியில் நீருமில்லை
நின்றாலும் மணலல்லும் மற்றோர் கொள்ளை
இறைவா உனமனம் இறங்காதோ
விவசாயி வாழ்வும் இனி மலராதோ
நம்பிக்கை தளர்ந்தோம் இறைவா
நாங்கள் நன்மைபெறும் நாளெந்நாளோ