டிசம்பர்

anusuya
டிசம்பர் 31, 2016 01:31 பிப

டிசம்பர் மாதம் . கடைசி மாதம் என்பதால் மொத்த மாதங்களின் நினைவுகளையும் சேர்த்து டிசம்பர் ஏற்படுத்தும் தாக்கங்கள் மற்ற மாதங்களை விட சற்று அதிகம் தான் .

என் சிறு வயதில் எனக்கு டிசம்பர் மாதங்கள் விடுமுறைக்காக பிடிக்கும் .பின் டிசம்பருக்கே உரிய கிறிஸ்துமஸ்க்காவும் , வெள்ளை தாடி கிறிஸ்துமஸ் தாத்தாக்காகவும் டிசம்பர் மாதங்கள் பிடிக்கும் . எங்கள் தெருவில் வரும் கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலங்களுக்கு பின்னால் பல முறை ஓடியிருக்கிறேன் . அவரிடம் சாகலேட் வாங்கி விட்டால், ஏதோ பெரிய சாதனை செய்துவிட்டது போல் மகிழ்ந்திருக்கிறேன் . பின் மழைக்காகவும் எனக்கு டிசம்பர் மாதம் பிடிக்கும் . ( மழையால் வரும் விடுமுறைக்காகவும் தான் ) எனக்கு மிகவும் விருப்பாமான வெள்ளை செவ்வந்தி, பட்டங்கள் மற்றும் சிறுகிழங்குக்காகவும் டிசம்பர் மாதங்கள் பிடிக்கும் .

டிசம்பர் மாதமும் . டிசம்பர் மாதத்தில் எனக்கு பிடித்தவையும் பெரும்பாலும் அப்படியே தான் இருக்கிறது . ஆனால் , மகிழ்ச்சிக்கு பதிலாக
பயம் இருக்கிறது . டிசம்பர் மாதத்தின் தாக்கங்கள் தான் தாங்கக்கூடியதாக இல்லை . அதுவும் குறிப்பாக , டிசம்பரின் முதல் வாரமும் , டிசம்பர் 26 ம்
காட்டும் மிரட்டல் கொஞ்சம் இல்லை .

பயத்தோடும் , பதற்றத்தோடும் ஆரம்பித்த டிசம்பர் மாதம் என்ன மன நிலை என்றே தெரியாத ஒரு மன நிலையில் முடியப்போகிறது .

என்னை என்னதான் காயப்படுத்தினாலும் , டிசம்பர் மாதமே நீ எனக்கு பிரியமானவன் தான் .

மீண்டும் அடுத்த வருடத்தில் சந்திப்போம்!