மயக்குறாளே! என்ன மயக்குறாளே!

சீர்காழி சபாபதி
டிசம்பர் 31, 2016 12:04 முப
உருண்ட கண்ண
உருட்டி உருட்டி
என்ன சுருட்டுறா!

பச்சரிசி பல்லக்காட்டி
சிரிச்சி சிரிச்சி
என்ன மயக்குறா!

மாம்பழ கன்னதுல
கொழச்சி கொழச்சி
மனச பூசுறா!

வாழதண்டு கையஆட்டி
பேசி பேசி
உசுர எடுகுறா!

பூனபோல நடநடந்து
மெதுவா மெதுவா
மனச இழுக்குறா!

ஏன்டீ என்ன
இப்படி படுத்துற?
கொஞ்சம் சும்மான்னு
இருக்க மாட்டியா?
என்ன செவனேன்னு
விடவும் மாட்டியா?