வரட்சி மாநிலம்

தியா
டிசம்பர் 30, 2016 09:44 முப
வறட்சி மாநிலம் கேட்ப்பாய்

வெள்ளம்  நிவாரணம் கேட்ப்பாய் – நீ
வெட்கம் கெட்டு வரட்சி  நிவாரணமும் கேட்ப்பாய் 
உன் அன்னை மலடி   என 
கூசவில்லை உன் உடம்பு 
வெட்டிய ஏரியை பங்குப் போட்டாய்-மிச்சம் 
நிரம்பிய ஏரியை வெட்டிவிட்டாய்
கையேந்தி  பழகிவிட்டாய்- அன்டையில்
குறை சொல்லி காலம் கடத்திவிட்டாய்
அடிமையாக போகிவிட்டாய்
அரசியல் நாடகம் நடத்தவிட்டாய்
இங்கு நீ வாழவில்லையென்றால்
எங்குதான் வாழ்வாய்  
என் தமிழா

      G.D.முருகானந்தன்