வாடி என் ராசாத்தி!

சீர்காழி சபாபதி
டிசம்பர் 29, 2016 10:32 பிப

ஆளா தழைஞ்சி
அழகா வெளஞ்சவளே
என் உசுர
அடியோட பறிச்சி
அப்படியே அள்ளிக்கிட்ட

குளிச்சி முடிஞ்சி
காலையில கோயிலுக்கு
நித்த நீ
போனதால புள்ளயாரு
செலையா குந்திடாரு!

ஆடி குதிச்சி
ஆசையா நீ
தொட்டதால அந்த
ஐய்யனாரு சாமி
குதிரையும் பொம்மயாச்சுதடி!

மார்கழி கோலம்போட
வாசலுக்கு வந்தபுள்ள
உன் வாசம்
பட்டதால ஊரெல்லாம்
பூத்து குலுங்குதடி!

மாமன் காத்திருக்கேன்
மாலைகட்டி வச்சிருக்கேன்
கழுத்தநீ நீட்டிபுட்டா
கண்ணுக்குள்ள உன்னவச்சு
காவியமா பாத்துபேன்டி!