எதிர்நோக்கி காத்திருக்கிறேன்...

வினோத் கன்னியாகுமரி
டிசம்பர் 24, 2016 10:57 பிப
தொலைந்து போனது எனக்காக வாழ்ந்த நாட்கள்...
வாழ வேண்டும் உறவுகளுக்காக இனி என்றென்றும்!
கலைத்துவிட்டேன்  எனக்கான ஆசைகள்
மெய்ப்பட வேண்டும் இனி உறவுகளின் ஆசைகள்
மறைந்து போனது எனக்காக வேண்டிக்கொண்ட பொழுதுகள்
வேண்டுதல்கள் தொடரும் இனி உறவுகளுக்காக...

விழி சிந்திய துளிகள்.. நொறுங்கிப் போன கனவுகள்..
அழிக்க இயலாத நினைவுகள் ...
இவை கலந்த சிறு பொம்மை நான்
 உணர்விருந்தும் உயிர் இருந்தும் கடவுளின் கரங்களில்
நூலில் கோர்த்து ஆடும் பொம்மை நான் எதிர்ப்புக்கள் இன்றி!!

வெளியிடப் படாத புத்தகமாய் என் உள்ளக் குமுறல்கள்!!
என் இதயக் கூட்டிற்குள் நிரந்தரமாய்
நிச்சயம் ஒன்று மட்டும்...

என்னை நான் புரிந்து கொள்ளும் நொடி
பயணப்பட்டிருக்கும் என் உயிர் 
சுதந்திரமாய்... உடல் சிறை விடுத்து
காத்திருக்கிறேன் எதிர் நோக்கி
என்னை நான் புரிந்து கொள்ள...!